Thursday 24 May 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

#கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவேயில்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்..அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்களை மதிப்பது எப்படி..?

மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

சாலை விதிகள் என்ன?

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

அடிப்படைச் சட்டங்கள் என்ன?

நமக்கான உரிமைகள் என்ன?

காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

நோய்களை எவ்வாறு கண்டறிவது?

எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?

கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?

மற்றவர்களை நேசிப்பது எப்படி?

நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..

ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது
By
K. Jagadeesh

Wednesday 16 May 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

*மன்னிப்பைப் பற்றி* மருத்துவம் சொல்வது
பகீர் தகவலாக உள்ளது.......

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன, மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது.

எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும்.

இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

'ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும், நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை, மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத் தன்‍மையை தெரிந்து கொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது, நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும், நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால், பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள், மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது, எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு, நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம், கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பல வேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.

கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.

அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.

ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல.

அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில், மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும், மன்னிக்க மறக்காதீர்கள்.
By
K. Jagadeesh

Wednesday 9 May 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

பீஜமந்திரம்

சப்த நாடிகளை ஒருங்கிணைக்கும் சித்தர்கள் உச்சரிக்கும் பீஜமந்திரம்

நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் “ம்” தான் “ங்” ஆக மாறுகின்றது. அதாவது “ஓம்”காரம் என்பது “ஓங்”காரமாகவும், “ரீம்”காரம் என்பது “ரீங்”காரமாகவும் மாறுகின்றது. “காரம்” என்பது வரிசை என பொருள் கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரையில் முதலில் பேச பழகும்போது “ங்” சேர்ந்த வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. அதாவது அங்கு, வங்கு, வங், யங் போன்ற பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இதற்குபின் தான் “ம்” சேர்ந்த பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. அதாவது அம்மா, ஓம், ஆமா போன்ற வார்த்தைகளை உச்சரிக்கின்றன.

மேலும் “ங்” சேர்ந்த பீஜங்களை உச்சரிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இமையை அதிகமாக அசைக்காது கூர்ந்து எதையும் கவனிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும்.
அடுத்ததாக “ம்” சேர்ந்த பீஜங்களை ஊமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

உதாரணமாக இம், உம், அம், ஓம், ஈம் போன்ற வார்த்தைகள். இதனால் வாய் பேசாதவர்களுக்கு இவ்வார்த்தைகள் இயற்கையாகவே வருவதால் அவர்களுக்கு ஓர் தனித்துவமான உள்ளே உற்றுநோக்கல் எளிதாக கிடைக்கின்றது. எதிலும் வெற்றியடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கை வெறி அதிகமாகிறது.

இதுவும் இந்த பலனும் அனைவருக்கும் பொருந்தும். ஆக “ங்” சேர்ந்த பீஜங்களை உச்சரித்து பழகினால் வெளியில் உற்று நோக்கலும், நாதமும், இமை அசைக்கா தன்மையும் எளிதாக கைகூடும். மேலும் இமை அசைவது குறைய குறைய மன சஞ்சலம் குறைந்து மன நிம்மதியும் எதிலும் எளிதாக முடிவெடுக்கும் திறனும் கிடைக்கும்.

சித்தர்கள் முதல் அனைவரும் போற்றும் நன் மந்திரங்களுள் “அங்” என்ற பீஜ மந்திரமும் ஒன்று. இம்மந்திரத்தை ஒருவர் தொடர்ந்து மனதினால் உட்சரித்து கொண்டிருந்தாலே போதும், அவர் எல்லா விதத்திலும் சகல நன்மைகளையும் அடைவது சத்தியம்.

1. இந்த “அங்” என்ற பீஜமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உட்சரித்துகொண்டிருந்தால் “கங்” என்று மாறி ஒலிக்கும். கங் என்ற பீஜம் கணபதிக்கு ஊறிய மந்திரமாகும். எனவே இதை மந்திரங்களிலே முதன்மையானது என்பர்.

2. “அங்” என்று உட்சரிக்க தொடங்கிய நொடியே வாசி(சுவாசம்) ஊர்த்துவ கதியாக அண்ணாக்கிற்கு மேலே செல்வதை கண் கூடாக உணரலாம். வாசியோகம் செய்வதால் என்ன பலன் உண்டோ அதே பலன் இதற்கும் உண்டு.

3. இம்மந்திரத்தை தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் உட்சரிக்கும் போதே சுவாசம் இயற்கையாகவே குறைய தொடங்கும். தொடர்ந்து உட்சரிக்கும் போது சுவாசம் இயற்கையாகவே நின்றுவிடும். வாசி, கிரியா யோகத்தின் முடிவு நிலை என்பது சுவாசமற்ற நிலையாகும். அது இம்மந்திரத்தால் இயற்கையாகவே நடந்துவிடுகின்றது. மேலும் இம்மந்திரம் எண்ணெற்ற பயன்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது.

அங்” என்பது வாலைக்குரிய பீஜமந்திரமாகும். அதாவது “அம்” என்ற நாதம் ஒளிக்குரியது ஆகும். ஒருவர் தொடர்ந்து இம்மந்திரத்தை மனதினுள் உட்சரிக்கும் போது ஒளியின் நாத அதிர்வுகளை முதலில் கேட்க தொடங்கி பின் பார்க்கவும் தொடங்குகின்றான். ஒளியை பற்றிய எல்லா இரகசியங்களும் அவனுக்குள் ஒலிக்கும் நாதத்தின் மூலமாக கற்றுதரப்படுகின்றது.

இது விஞ்ஞான முறையில் கூறுவதாகும். மெஞ்ஞானமுறையில் கூற வேண்டும் என்றால் வாலையின் அருளை பெற்றவன் என்பார்கள். மேலும் அவன் “அங்” என்று தொடர்ந்து உட்சரித்துக் கொண்டே இருக்கும் போது, அது “கங்” என்று மாறி ஒலிக்க தொடங்கும். வேண்டுமென்றால் நீங்கள் அங்அங்அங் என்று வேகமாக உட்சரித்து பாருங்கள் அது “கங்” என்று மாறி கேட்கும். முன்பே கண்டதுபோல் “கங்” என்பது கணபதிக்குரிய பீஜமந்திரமாகும். மேலும் “கம்” என்பது ஆகாயத்திற்கு உரிய நாதமாகும். எனவே அந்நாதத்தின் மூலமாக ஆகாயத்தின் இரகசியங்களை கற்றுகொள்கின்றான்.

மேலும் ஆகாயத்தில் எண்ணென்ன உள்ளனவோ, அவைகளின் நாத ஒலிகளும் இவனுள் கேட்க தொடங்கி அவைகளின் இரகசியங்களையும் இவனுக்கு அந்தந்த நாதங்களின் மூலமாக கற்றுதரப்படுகின்றது. பொதுவாக ஒவ்வொரு விதமான மந்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்பார்கள். உண்மையில் ஒருவர் விடாமுயற்சியுடன் ஒரே மந்திரத்தை உட்சரித்து கொண்டே இருந்தால் போதும், மேலே பார்த்ததுபோல் அம்மந்திரமே மாறிமாறி ஒலித்து அவனுக்கு இல்லறத்தில் சகல நன்மைகளையும் பெறசெய்து, ஆன்மீகத்தின் சகல இரகசியங்களையும் கற்றுதந்துவிடும்.

ஒரே மந்திரத்தை தொடர்ந்து உட்சரிப்பது என்பது ஒரே இடத்தில் மண்ணை தோண்டுவதற்கு சமம். என்றோ ஒரு நாள் தண்ணீர் கிடைத்து தான் ஆக வேண்டும். ஒருவன் ஆன்மீகத்தில் பின்தங்குவதற்கு காரணம் பல இடங்களில் தோண்டுவதால் தான். அதுவும் வெளியே தோண்டுவதால் தான். அது அவரவர் எண்ணங்களையும் சூழ்நிலையையும் பொறுத்தது. ஆனால் கண்டிப்பாக பலன் உண்டு.

ஆன்மீகத்தில் ஒருவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகளையும், விடை கிடைக்காத எதார்த்தமான கேள்விகளுக்கு விடைகளையும் விளக்குவதே இப்பதிவு.
By
K. Jagadeesh