”ராஜதந்திரம்" என்ற பெயரில் மக்கள் உணர்வுகளை அவமதிக்காதே!
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசு பதவியேற்கும் விழாவிற்கு சார்க் (SAARC) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ”அண்டை நாடுகளுடன் நல்லுறவு” என்ற பெயரிலும் ’ராஜ தந்திரம்” என்ற பெயரிலும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இந்த அழைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. ராஜதந்திர ரீதியில் ராஜபக்சேவை அழைப்பது சரிதான் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருக்கிறது. இதனை அரசியலாக்க வேண்டாம் என்று பா.ஜ.க தலைமை கோருகிறது.
இனப்படுகொலைப் போரை ஈழத்தமிழ் மக்கள் மீது தொடுத்து, ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலைச் செய்த குற்றத்திற்காக இலங்கையின் அதிபர் இன்று உலக நாடுகளின் அரங்கில் போர் குற்றத்திற்காகவும் மானுடத்திற்கு எதிரான குற்ற நடவடிக்கைகளுக்காகவும் சர்வ தேச விசாரணைக்கு நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் மார்ச் 2014இல் நிறைவேற்றியுள்ளது.
மே 2009 முதல் உலகளாவ உள்ள மனித உரிமை அமைப்புகளும் புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழக அரசும், தமிழக மக்களும், சர்வதேச நாடுகளும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இடைவிடாது முன் வைத்த இந்த கோரிக்கையின் விளைவாக இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது.
தமிழக சட்டமன்றம், தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் முகமாக, இலங்கை அரசு மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு ஒத்துழைக்காத இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் இராசபக்சேவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு விமர்சிக்கபடுகிறது. ராஜதந்திரம் என்ற பெயரில் தமிழக மக்களின், மனித உரிமை ஆர்வலர்களின் உணர்வுகளை மதிக்காமல், மேலும் காயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்டை நாடுகளுடன் நல்லிணக்கம் என்னும் பெயரில் உள் நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கின்ற போக்கு அரசின் ஆரோக்கியமான அயல் உறவு கொள்கைக்கு வழி வகுக்காது. ஆரோக்கியமான உள் நாட்டு கொள்கையின் நீட்சியாகத்தான் அயலுறவுக் கொள்கை இருக்கமுடியும்; இருக்க வேண்டும்.
மத்திய அரசு ஆரோக்கியமான கூட்டாட்சிக் கொள்கையை உயர்த்திப் பிடிப்பதாக இருந்தால் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்று குவித்துள்ள இலங்கை அரசிற்கு, லட்ச கணக்கான தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த ராசபக்சேவுக்கு இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும்,ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்க தேவையான சுயராஜ்ஜிய (தன்னாட்சி) உரிமையை மறுக்கின்ற ராசபக்சேவின் அரசியல் அணுகுமுறை ஈழத்தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை தர உதவாது.
ராஜதந்திரம் என்னும் பெயரில் மத்திய அரசு ராசபக்சேவுக்கு விடுத்துள்ள அழைப்பு தமிழ் மக்களையும் தமிழக அரசையும் மனித மாண்பையும் அவமதிக்கும் செயலாகும்; கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானதாகும் என்பதை ஆம் ஆத்மி கட்சி, தமிழ் நாடு பதிவு செய்து மத்திய அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. உள் நாட்டு மக்களின் நலன் மற்றும் உணர்வுகளை மதித்து அயலுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
By
jagadeesh.k
Mobile: 91-9841121780, 9543187772.
EmaiL: jagadeeshkri@gmail.com
Web: http://www.pinterest.com/jagadeeshkri/books-worth-reading/
Web:http://www.bookbyte.com/searchresults.aspx?type=books&author=jagadeesh+krishnan
Web;http://issuu.com/home/publications
Web:
https://www.morebooks.de/search/gb?utf8=✓&q=jagadeesh+krishnan
Web: http://www.amazon.co.uk/s/ref=nb_sb_noss/275-9424466-2127042?url=search-alias%3Daps&field-keywords=jagadeesh+krishnan
Web: http://www.amazon.co.jp /s/ref=nb_sb_noss/378-4986394-6216105?__mk_ja_JP=カタカナ&url=search- alias%3Daps&field-keywords=jagadeesh+krishnan
WEb:
http://www.amazon.es/s/ref=nb_sb_noss?__mk_es_ES=ÅMÅŽÕÑ&url=search-alias%3Daps&field-keywords=jagadeesh+krishnan
WEb:
my books
http://www.amazon.ca/s/ref=nb_sb_noss/180-0191351-1760005?url=search-alias%3Daps&field-keywords=jagadeesh+krishnan
WEb;
https://www.peecho.com/dashboard/applications/publications?applicationId=3105.
11:18AM | URL: http://tmblr.co/Zm1NQp1B-4a8y
APRIL 3, 2014

No comments:
Post a Comment