Saturday 10 December 2016

Is Hindi older than Tamil?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!!!
Is Hindi older than Tamil (actually people write it as Thamizh, because the last alphabet has no equivalent pronunciation in English)?
Absolutely Not. Thamizh is several millennium old. Its written format is dated at least 300BC (as of now) based on available stone edicts. The oldest available literary and grammar work is dated around 200 BC (there is some difference of opinion here among scholars - some believe it could be around 100AD). One of the important missing pieces in Thamizh language (and culture) is the lost land mass called Kumari Kandam. This land has been lost to sea. If there could be any future evidence on this, it can push these dates by atleast few millenniums more.
In any case, all these dates are way long back in time compared to Hindi. Hindi is a combination of Sanskrit, Urdu and other local dialects. Hindi is believed to have formed as local dialects around 1000 AD.
By
K.Jagadeesh

Friday 2 December 2016

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்!

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்!
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம்
3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது.
3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே
இருக்கி றது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடு
கின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால்
‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை...

By
K.Jagadeesh

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்
அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!
மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!
மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!
அதேபோல, பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க...; கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!; என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!
உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை..!!; உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு...!! நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;
மனசுக்குள்ளயும் சொல்லலாம்!! வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும்.
முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!!
நீங்களும் செஞ்சு பாருங்க!!; பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்
தருகிறார் ஷீலா!!
இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்!
“இது ஒண்ணும் புதியதில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!
மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!
‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?
இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை *""Ora Science""*என்று சொல்வாங்க!!
*எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)*..... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!
உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற *சக்தி கொண்ட ஒரு பொருள்!!!*
கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ; அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!
*இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!*
உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது; அதுவே *அதிர்வுகளாக* (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!! எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!
ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!! இதுவும் *அறிவியல்தான்!!*
எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்; எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்; விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!
இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!! அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!! அப்படி வாங்கினால், கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!! இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!!
By
K.Jagadeesh

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி

*திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி :*?
திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர்.
4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.
7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"
பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்றுr அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக
By
K.Jagadeesh