Thursday 22 February 2018

Jagadeesh Krishnan psychologists and international Author

நல்ல தகவல், இது இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள.

இது பெண்களுக்கு எதிரானதுமல்ல.. ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவும் அல்ல.....

உலகில் உள்ள எத்தனையோ நாடுகள் நாகரீகம் என்கின்ற பெயரில் தங்கள் கலாச்சாரங்களை சீரழித்து கொண்டிருக்கும் போது இந்தியர்கள் மட்டுமே கலாச்சாரம், பண்பாடு, என்று பழைமை மாறாமல் மேற்கத்திய நாகரீகத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், பெண்களை தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் வணங்குவது இந்தியாவில் மட்டும்தான் !

பலநூறு ஆண்டுகளாக சேலை உடுத்திவந்த நம் பெண்கள் உடுத்துவதற்கு எளிதாக இருப்பதாலும், கொஞ்சம் மாடர்னாக இருப்பதாலும் நிறைய பாதுகாப்பாக இருப்பதாலும் சுடிதார் அணிய ஆரம்பித்தார்கள், பின் இரவில் மட்டுமே அணியவேண்டிய nighty யை பகலெல்லாம் அணிந்து அகதிகளை போலவும், அரை பைத்தியங்கள் போலவும் தெருக்கள் தோறும் திரிய ஆரம்பித்தார்கள், இப்போது புதிதாக ஒன்று
வந்திருக்கின்றது.

' #லெக்கின்ஸ் '!

இடுப்பில் இருந்து ஒரு பெண்ணின் கால் எந்த அளவில் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது, சுடிதாருக்கு மாற ஒரு காரணம் இருந்தது, இது போன்ற தனது அங்கங்களின் அளவை எடுத்துக்காட்டும் உடைகளை அணிய என்ன காரணம்?

ஒரு பெண் தன்னுடைய அறிவாலும், திறமையாலும் ஒழுக்கத்தாலும், பிறரை கவர நினைக்காமல் இதுபோன்ற ஆடைகளாலும், அலங்கரிப்புகளாலும்
ஆண்களின் கவனத்தை ஈர்ப்பது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது, இதற்கு பெரும்பாலான பெண்கள் சொல்லும் முட்டாள்தனமான பதில் ''ஆண்களின் பார்வை தான் தப்பாக இருக்கிறது, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! ''

இந்தியா என்பது ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினரையும் அதிகம் கொண்ட நாடு, இந்த சூழ்நிலையில் வளர்கின்ற ஒருவன் தனது தாயையோ, தங்கையையோ இது போன்ற ஆடைகளில் பார்க்காமல் வெளி உலகுக்கு வரும்போது அவனுக்கு இந்த உடைகள் எல்லாம் அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் தான் தெரியும்,

வெளிநாட்டினரை போல் ஒட்டுமொத்த பெண்களும் உங்களைப்போல் உடை அணிய ஆரம்பித்தால் உங்களை யாரும் eve teasing செய்யமாட்டார்கள் துன்புறுத்தமாட்டார்கள், அதுவரை அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்படியான, உடலழகையும், அளவையும் காட்டும் விதமான ஆபாச உடைகளை அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தை பருவங்களில் முறையாக, ஒழுக்கமாக, அன்போடும் ஆதரவோடும் வளர்க்கப்படாத கோடிக்கணக்கான குழந்தைகள் நம் நாட்டில் ரௌடிகளாகவும், பொறுக்கிகளாகவும், சைக்கோக்களாகவும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்.. அவர்கள் கண்ணில் நீங்கள் ஆபாசமாக தெரிந்தால் சீரழித்துவிடுவார்கள், முதலில் இந்த சமுதாயம் உங்களை எப்படி பார்க்கவேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

கண்ணியமான பெண்ணாக நிலைநிறுத்தினால் கையெடுத்து கும்பிடுவார்கள்,

ஒரு போகப்பொருளைப்போல் காட்சிதந்தால் கைதட்டிதான் கூப்பிடுவார்கள்!

ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன்னை கண்ணியமாக பார்க்க பழகினால் பின் இந்த உலகமே அவ்வாறு பார்க்கத்தொடங்கும்!

' #சிந்திப்பார்களா!
By
K. Jagadeesh

No comments:

Post a Comment