⚡💥 ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா
இத்தாலி பிரிட்டன் பலிகொடுக்க தொடங்கிவிட்டது, ஸ்பெயினில் விக்கெட்டுகள் மூன்றாம் அம்பையருக்கு அனுப்பபட்டாயிற்று, ஜெர்மன் மலங்க மலங்க விழித்து கொண்டிருக்கின்றது
ஆலயங்கள் மூடபட்டாயிற்று, ஞாயிறு திருப்பலிக்கு வராதது சாவுக்கு ஏதுவான பாவம் என சொல்லும் கிறிஸ்தவம், ஆலயம் வந்து சாகவேண்டாம் என கதவினை அடைத்துவிட்டது, திருப்பலியும் இல்லை நற்கருணையும் இல்லை, பாவமன்னிப்புமில்லை
கிறிஸ்தவ வழிபாடு யூத வழிபாட்டின் தொடர்ச்சி, அதாவது கூட்டு வழிபாடு,மொத்தமாக கூடித்தான் பிரார்த்திப்பார்ககள், கொஞ்ச நேரம் எடுக்கும் விஷயம் என்பதால் நோய் பரவ வாய்ப்பு என முடிவெடுத்தாயிற்று
இந்நிலையில் இந்துக்களின் ஆலய பிரவேசத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனியுங்கள், ஆச்சரியமான விஷயங்கள் புலப்படும்
கூட்டு வழிபாடு பெரும்பாலும் இல்லை மாறாக யாரும் எப்பொழுதும் வரலாம்
இந்து ஆலயங்கள் வழிபாட்டுக்கு சம்பிரதாயபடி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய்பரவும் முதல் வழி தடுக்கபடுகின்றது
ஆலயத்தில் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும் அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் செத்தே விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதும் இதே தத்துவமே
ஆம் கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள் அடிக்கடி கழுவுங்கள் என உலகம் இன்று ஒப்பாரி வைக்கும் வேளையில் தீப சுடரில் கைகளை காட்டி சூடேற்று அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்ன மதம் இந்துமதம்
கர்பகிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் அது கிருமி நாசினி , பசு சாண சாம்பல் இருக்குமிடம் கிருமி அண்டாது
சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமி செத்துவிடுகின்றது, ஆலயமெங்கும் புகை பரப்பும் விஷயம் அதுதான்
ஆலயமெங்கும் தீபம் ஏற்றபடும் தத்துவம் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேஷமானது
(இன்று நெய், எண்ணெய் எல்லாம் மாறிவிட்டது என்பது வேறுவிஷயம், இது சரியான முறை அல்ல.)
அங்கு தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதை கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுப்பு நிச்சயம்
பிரச்சாதம் என தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே
அது வைஷ்ணவ ஆலயமாக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கபடும் வேப்பிலை விட சிறந்த தோய் தடுப்பு மருந்து இல்லை
ஆலய மணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்? ஆலயமணியின் சில அதிர்வுகள் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள், மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும்
இசை ஒலிக்கபடும் தத்துவமும் இதுவே
கோவிலில் எல்லோரும் வரும் இடம் விக்ரகங்களை அடுத்து அர்ர்சகர் என்பதால் விகரகங்களையும் அய்யரையும் எப்பொழுதும் மகா சுத்தமாக இருக்க சொன்னார்கள்
அர்ச்சகர் தள்ளி நிற்பதும் அதிகம் தொட்டு பேச கூடா காரணம் இதுதான்.
அசைவம் உடல் வெப்பத்தை கூட்டும், ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும் அசைவ உணவினை உண்டவர்க்கு ஆலயத்தில் அனுமதி இல்லை என்றார்கள்
(அதாவது உடலில் சிந்தியிருக்கலாம், கைகளில் கழுவபடாமல் இருக்கலாம்)
அடிக்கடி காலையும் மாலையும் சில விக்ரகங்களை அபிஷேகம் என கழுவுகின்றார்களே ஏன் , அக்காலத்தில் விக்ரகத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இருந்தது, பலர் தொட்டு செல்லும் நிலையில் நோய் பரவிவிட கூடாது என்றே அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துகளும் இட்டு கழுவி சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள்
கற்பூர தீ கூட கிருமி அழிக்கும் தன்மை கொண்டதே, நறுமண பூக்களால் அலங்கரித்தார்கள், நல்ல மணம் கூட சில நல்ல விஷயங்களை கொண்டுவரும்
திதி கொடுத்தல் இன்னும் சில விஷயங்களில் அர்ர்சகர் கையில் தர்ப்பை கட்டுகின்றாரே ஏன்? தர்ப்பையில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தது இந்து சமூகம்.
இந்துக்கள் எதெல்லாம் செய்ய சொன்னார்களோ அதெல்லாம் நோய் தடுப்பென்றும் எதெல்லாம் தீட்டு என்றார்களோ அதெல்லாம் நோய் பரப்பும் விஷயம் என்பதை மவுனமாக ஒப்புகொள்கின்றது உலகம்
தொற்றுநோய் என புத்த விகாரை முதல் மேற்கத்திய தேவாலயம் வரை மூடபட்ட நிலையில், இந்து ஆலயங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒழிந்திருக்கும் நோய் தடுப்பு முறையினையும் அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யபட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி வியந்து கொண்டிருக்கின்றது உலகம்
இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல, புரிந்து கொள்ள முடியா மூடர்களின் கூட்டமே அப்படி சொல்லுமே அன்றி, அறிவுள்ள உலகம் நெருக்கடியான இந்நேரத்தில் இந்து ஆலயங்களின் பெருமையினை உணர்ந்து கொண்டிருக்கின்றது...By
Jagadeesh Krishnan psychologist and International
No comments:
Post a Comment