Thursday, 8 September 2022

magical powers

[9/9, 9:20 AM] JagadeeshChandraKrishnan: மந்திர_ஆற்றல்

மந்திரங்கள் என்பது அபரிமிதமான ஆற்றலை அடைவதற்கான நுண்வழி.

மந்திரம் என்பது ஆன்மீகத்தன்மையானது கிடையாது.அது ஒரு அரசியல்.
தனக்குள்ளே தானே நடத்தும் அரசியல்.

வெளியே நடத்தும் அரசியல் கிடையாது.

ஒரு ஆற்றலை ஒரு இடத்தில் குவிக்கும்

 அதாவது *மனதை ஒரு இடத்தில் குவிக்கும் முறையே மந்திரங்கள்*.

*எவ்வளவு அதிகமாக மனம் குவிகிறதோ அவ்வளவு சக்தியை பெறுகிறாய்*.

சூரிய ஒளியை ஒரு இடத்தில் லென்சில் வழியாக குவித்தால் ஒரு தீ உருவாகிறதே அது மாதிரி தான் இதுவும்.

சூரியனின் கதிர்கள் வெளிவருவது மாதிரி மனதிலிருந்தும் ஒருவித அதிர்வலைகள் வருகின்றன என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் சொல்கிறார்கள் மனம் ஒரு மின்னாற்றலை போன்றது என்று.

மந்திரம் என்பது லென்சை போன்றது.

ஒரே சொல்லை
திரும்ப திரும்ப ஒருவன் கூறும்போது அவன் மனம் ஒரு சொல்லில் குவிகிறது.

மீண்டும் மீண்டும் அதே சொல்லில் மனம் குவியும்போது அந்த சொல் லென்சை போன்று ஒரு இடத்தில் குவிந்து மிகப்பெறும் ஆற்றலை உருவாக்குகிறது.

இதற்கடுத்து அவன் செயற்கரிய காரியங்களை செய்வான்.

ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் அந்த சக்தி ஆன்மீகத்தன்மையானது கிடையாது.

ஆற்றலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

 இது தந்திரத்திற்கும் அன்பிற்கும் உள்ள வேறுபாட்டை போன்றது.

 *எதையும் அடையும் எண்ணமற்ற  தன்மையுமே ஆன்மீகம்*.

மந்திர    ஆற்றலின்   வழியே ஆற்றலு அடைய நினைப்பது  தந்திரம் 

மந்திரங்கள் மாயஜாலங்களின் பகுதியே தவிர மதங்களின் பகுதியல்ல.

ஆனால் இது ஒரு வலை மாதிரி ஒன்றோடு ஒன்று பிணைந்துவிட்டது.

வாழ்வில் மாயாஜாலங்களை புரிபவர்கள் எந்த விதத்திலும் மதத்தன்மையானவர்கள் கிடையாது.

மதத்தின் பெயரால் செய்யும் மாயாஜாலங்கள் தவறானவை மற்றும் ஆபத்தானவை..

*மனம் குவிந்து பெரிய ஆற்றலை பெற்றுவிட்டாய்*.

*அடுத்து நீ நினைத்தவற்றையெல்லாம் பெறப்போகிறாய்*.

*வெளிஉலகத்தை சேர்ந்த அனைத்தையும் பெறப்போகிறாய்*.

 ஆனால் உன் சுயத்தை அப்போது நீ இழந்திருப்பாய்.

ஆற்றல்களையெல்லாம் ஒரு பொருளில் குவிக்கும்போது அவன் அந்த பொருளில் ஐக்கியமாகி போகிறான்.

தன் சுயத்தை அவன் இழக்கவேண்டிவருகிறது.

வெளிஉலக பொருள்களோடு நீ பயணிக்க ஆரம்பிக்கிறாய்.

*நீ ஒரு மந்திரங்களில் தோய்ந்துபோன மனிதனாக இருந்தால் ஒரு மரத்தை பார்த்து ``நீ செத்து போ`` என சாபமிட்டால் அந்த மரம் செத்துவிடும்*.

*ஒரு நோயாளியை பார்த்து நீ  குணமடைவாய்
என நீ சொன்னால் அவன் குணமடைந்துவிடுகிறான்*.

*``நீ நோய்வாய்ப்படு `` என சொன்னாலும் அவன் நோய்வாய்ப்படுவான்*. 

*நீ சொல்வதெல்லாம் பலிக்கும்.*

அப்போது நீ ஆற்றல் வாய்ந்த மாயாவாதியாக/மந்திரவாதியாக மட்டுமே இருப்பாய்.

மனிதக்கடவுளாக அறியப்படமாட்டாய். 

மனிதக்கடவுளாக (ஞானி)
வாழ்பவனுக்கு சூரியனின் கதிர்கள் நாலபுறமும் பாய்வதைப் போல அவன் ஆற்றல்கள் நாலாபுறமும் பாயும்.

ஒரு இடத்தில் அவன் குவிக்கமாட்டான்.

அவன் எந்தவித வெளிப்புற பொருள்களிலும் ஐக்கியமாகமாட்டான்.

அவன் தனக்குள்ளே உள் சென்று ஆராய்வான்.

உனக்குள்ளே நீ செல்ல செல்ல நற்செயல்கள் வெளிப்படும்.

கடவுள் தன்மையை வெளிக்காட்டுவாயே தவிர ஆற்றலை வெளிக்காட்டமாட்டாய்.
By
Immortal Bhagavaan Jagadeesh
[9/9, 9:24 AM] JagadeeshChandraKrishnan: magical_energy
Mantras are the gateway to attain immense power.
Magic is not spiritual. It is political.
Politics within itself.
There is no outside politics.
Concentrates an energy in a place
 That means *mantras are methods of concentrating the mind in one place*.
*The more mind you concentrate, the more power you get*.
This is similar to how a fire is formed when sunlight is focused through a lens at a point.
Psychologists say that some kind of vibrations come from the mind like the rays of the sun.
They say the mind is like electricity.
Mantra is like lense.
One word
When one repeats, his mind concentrates on one word.
When the mind concentrates on the same word over and over again, the word concentrates in one place like a lens and creates a concentrated energy.
After this he will do practical things.
Know one thing that power is not spiritual.
Energy has nothing to do with spirituality.
 It is like the difference between trickery and love.
 *The thoughtlessness of achieving anything is spiritual*.
The trick is to think of gaining power through magical energy
Mantras are part of magic and not part of religions.
But it's a web model intertwined.
People who understand magic in life are not religious in any way.
Magic performed in the name of religion is wrong and dangerous..
*You have concentrated your mind and gained great energy*.
*Next you will get everything you thought*.
*You will get everything that belongs to the outer world*.
 But then you will have lost your self.
When he concentrates all energies in an object, he becomes united with that object.
He has to lose his self.
You begin to travel with outer world objects.
*If you are a man steeped in mantras, if you look at a tree and curse ``You die'', the tree will die*.
*See a sick person and you will get well
If you say so, he will be cured*.
* Even if you say ``get sick'' he will get sick*.
*Everything you say will work.*
Then you will only be a powerful magician/sorcerer.
You will not be known as a human god.
As a human god (jnani)
As the sun's rays flow to the living person, his energies flow in all four directions.
He does not concentrate in one place.
He is not united with any external objects.
He goes into himself and investigates.
As you move within you, good deeds will emerge.
God manifests character, not power.
By
Immortal Bhagavan Jagadeesh

magical powers

[9/8, 9:32 PM] JagadeeshChandraKrishnan: ஜன்னல் கதவு

சத்தியத்தைப் பெற வேண்டுமாயின் மனத்தை விட்டுவிடுங்கள். மனம் இல்லாமல் போன மறு விநாடியே சத்தியம் அங்கே தோன்றிவிடுகிறது. ஜன்னல் கதவுகள் திறந்ததும் சூரிய ஒளி உட்புகுந்து விடுவதைப் போல. சத்தியத்தின் வரவை மனம் ஒரு சுவரைப் போல் தடுத்து நிறுத்திக் கொள்கிறது. மனத்தின் இந்த சுவர் எண்ணங்களின் செங்கல்லைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. எண்ணங்கள், சிந்தினைகள், கருத்துக்கள் இவற்றின் சங்கிலித் தொடரே மனம் என்பது.

ரமண மகரிஷி ஒருவருக்குக் கூறினார்: " எண்ணங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். பிறகு கூறுங்கள் மனம் எங்குள்ளதென்று". 

சிந்தனை இல்லாத இடத்தில் மனமும் இருக்காது. செங்கற்கள் இல்லாவிட்டால் சுவர் எங்கிருந்து வரும்?

நேற்றிரவு ஒரு சாது வந்திருந்தார். அவர் கேட்டார்: "மனத்துடன் நான் என்ன செய்ய வேண்டும்?" 

நான் கூறினேன்: " ஒன்றும் செய்ய வேண்டாம். மனத்தை விட்டு விட்டுப் பாருங்கள் . அதனை முழுக்கவே விட்டு விடுங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். நதிக்கரையில் அமர்ந்தவாறு ஒருவன் நீர் பிரவாகித்துக் கொண்டு இருப்பதை பார்ப்பதைப் போல. நீங்களும் உங்கள் சிந்தனையின் பிரவாகத்தை நோக்குங்கள். எதிலும் ஒட்டாமல், தனித்தவனாய். பார்த்துக் கொண்டே இருங்கள். அவ்வாறு பார்த்துக் கொண்டே இருக்கும் போது சிந்தனைகள் சாய்ந்து விடுகின்றன. மனம் இல்லாமலாகி விடுகிறது". 

மனம் அகன்றதும் அந்தத் தலத்தில் ஓர் அனுபவம் ஏற்படுகிறது. அதுவே ஆத்மாவாகும். அதுவே சத்தியமாகும். ஏனெனில் அதுவே உண்மை.
ஜெகதீஷ்சந்திரகிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[9/8, 9:33 PM] JagadeeshChandraKrishnan: Window door

 Let go of the mind if you want to get the truth.  The second the mind is gone, the truth appears there.  As the sunlight pours in when the windows and doors are open.  The mind blocks the coming of truth like a wall.  This wall of the mind is built with the bricks of thoughts.  Mind is a chain of thoughts, ideas and concepts.

 Ramana Maharishi told someone: "Stop the thoughts. Then tell where the mind is".

 Where there is no thought there is no mind.  Where will the wall come from if there are no bricks?

 A Sadhu had come last night.  He asked: "What shall I do with the mind?"

 I said: "Don't do anything. Leave the mind alone. Let it go completely. Keep watching. Just like a person sitting on the bank of a river watching the water flowing by. Watch the flow of your thoughts. Be single, not attached to anything. Keep watching. Keep watching like that.  When there is, the thoughts fall away. The mind becomes absent".

 When the mind expands, an experience occurs at that place.  That is the soul.  That is the truth.  Because that is the truth.
 Jagadeesh Chandra Krishnan is a psychologist and international writer