Thursday 8 September 2022

magical powers

[9/8, 9:32 PM] JagadeeshChandraKrishnan: ஜன்னல் கதவு

சத்தியத்தைப் பெற வேண்டுமாயின் மனத்தை விட்டுவிடுங்கள். மனம் இல்லாமல் போன மறு விநாடியே சத்தியம் அங்கே தோன்றிவிடுகிறது. ஜன்னல் கதவுகள் திறந்ததும் சூரிய ஒளி உட்புகுந்து விடுவதைப் போல. சத்தியத்தின் வரவை மனம் ஒரு சுவரைப் போல் தடுத்து நிறுத்திக் கொள்கிறது. மனத்தின் இந்த சுவர் எண்ணங்களின் செங்கல்லைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. எண்ணங்கள், சிந்தினைகள், கருத்துக்கள் இவற்றின் சங்கிலித் தொடரே மனம் என்பது.

ரமண மகரிஷி ஒருவருக்குக் கூறினார்: " எண்ணங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். பிறகு கூறுங்கள் மனம் எங்குள்ளதென்று". 

சிந்தனை இல்லாத இடத்தில் மனமும் இருக்காது. செங்கற்கள் இல்லாவிட்டால் சுவர் எங்கிருந்து வரும்?

நேற்றிரவு ஒரு சாது வந்திருந்தார். அவர் கேட்டார்: "மனத்துடன் நான் என்ன செய்ய வேண்டும்?" 

நான் கூறினேன்: " ஒன்றும் செய்ய வேண்டாம். மனத்தை விட்டு விட்டுப் பாருங்கள் . அதனை முழுக்கவே விட்டு விடுங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். நதிக்கரையில் அமர்ந்தவாறு ஒருவன் நீர் பிரவாகித்துக் கொண்டு இருப்பதை பார்ப்பதைப் போல. நீங்களும் உங்கள் சிந்தனையின் பிரவாகத்தை நோக்குங்கள். எதிலும் ஒட்டாமல், தனித்தவனாய். பார்த்துக் கொண்டே இருங்கள். அவ்வாறு பார்த்துக் கொண்டே இருக்கும் போது சிந்தனைகள் சாய்ந்து விடுகின்றன. மனம் இல்லாமலாகி விடுகிறது". 

மனம் அகன்றதும் அந்தத் தலத்தில் ஓர் அனுபவம் ஏற்படுகிறது. அதுவே ஆத்மாவாகும். அதுவே சத்தியமாகும். ஏனெனில் அதுவே உண்மை.
ஜெகதீஷ்சந்திரகிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[9/8, 9:33 PM] JagadeeshChandraKrishnan: Window door

 Let go of the mind if you want to get the truth.  The second the mind is gone, the truth appears there.  As the sunlight pours in when the windows and doors are open.  The mind blocks the coming of truth like a wall.  This wall of the mind is built with the bricks of thoughts.  Mind is a chain of thoughts, ideas and concepts.

 Ramana Maharishi told someone: "Stop the thoughts. Then tell where the mind is".

 Where there is no thought there is no mind.  Where will the wall come from if there are no bricks?

 A Sadhu had come last night.  He asked: "What shall I do with the mind?"

 I said: "Don't do anything. Leave the mind alone. Let it go completely. Keep watching. Just like a person sitting on the bank of a river watching the water flowing by. Watch the flow of your thoughts. Be single, not attached to anything. Keep watching. Keep watching like that.  When there is, the thoughts fall away. The mind becomes absent".

 When the mind expands, an experience occurs at that place.  That is the soul.  That is the truth.  Because that is the truth.
 Jagadeesh Chandra Krishnan is a psychologist and international writer

No comments:

Post a Comment