Wednesday 28 December 2022

mind

[12/29, 7:01 AM] Jagadeesh Chandra krishna: Our mind is very fast and can think of a place even thousands of miles away in a second.
 In a moment our mind can think of even the planets that are far away, far away, beyond our reach.
 Distance is not a barrier for the mind to think.
 Our mind is capable of knowing how far away it is.
 The mind is always inquiring about what is far away.
 It does not have the ability to know anything close to us.
 For example, the sky tells us that it is thousands of kilometers above our heads.
 As soon as we say sky, we stand up and look above our heads.  God is believed to exist in a distant space above the earth.
 Akayam is one of the panchabhuta shaktis, the most primal. All creation takes place in this Akash shakti.
 About nine hundred and eight percent of this energy is Akash.  Creation is only about two percent.
 But if that two percent creation is so vast, our minds cannot calculate the total cosmic force.
 But this celestial power is not just outside of us.
 It is very close to us.
 It is not difficult for the self-realized sages to know the distance.  They said it is difficult to know what is very close to us.
 In meditation, a man can feel the celestial energy within him, just in the state of his mind.
 Space is not just somewhere far away.  It starts from within us.
 For example, the space between one thought and the next thought is space
By
 Jagadeesh Krishnan is a psychologist and international author
[12/29, 7:02 AM] Jagadeesh Chandra krishna: நமது மனம் மிகவும் வேகமானது.பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள இடத்தைக் கூட, ஒரு நொடியில் நினைத்து விடும்.
வெட்டவெளியில், தொலைதூரத்தில், நாம் செல்ல முடியாத தூரத்தில் இருக்கும் கோள்களைக்கூட, நமது மனம் ஒரு நொடியில் நினைத்து பார்த்துவிடும்.
மனதிற்கு நினைத்துப் பார்ப்பதற்கு தூரம் ஒரு தடையே கிடையாது.
எவ்வளவு தூரத்தில் இருப்பதையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது நமது மனம்.
மனம் எப்போதும் தூரத்தில் உள்ளதைப் பற்றியே ஆராய்ச்சி செய்யும் தன்மை கொண்டது.
அதற்கு நமக்கு மிக அருகே இருக்கும் எதையும் தெரிந்து கொள்ளும் தன்மை கிடையாது.
உதாரணமாக ஆகாயம் என்றால், நமது தலைக்கு மேலே, பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகத் தான் நம்மிடம் சொல்லி வைத்திருக்கிறது.
ஆகாயம் என்று சொன்னவுடன், நாம் நிமிர்ந்து தலைக்கு மேலே தான் கவனிப்போம். கடவுள் என்ற சக்தி பூமிக்கு மேலே உள்ள தொலைதூர ஆகாயத்தில் இருப்பதாகத் தான் நம்பப்படுகிறது.
ஆகாயம், என்னும் பஞ்சபூத சக்திகளில் ஒன்று தான், மிகவும் முதன்மையானது.படைத்தல் அனைத்தும் இந்த ஆகாஷ் என்னும் சக்தியில் தான் நிகழ்கிறது.
இந்த ஆகாஷ் என்னும் சக்திதான் சுமார் தொன்னூற்று எட்டு சதவீதம் இருக்கிறது. படைத்தல் என்பது வெறும் சுமார் இரண்டு சதவீதம் தான்.
ஆனால் அந்த இரண்டு சதவீத படைப்பே மிகவும் பிரம்மாண்டமானது என்றால், மொத்த ஆகாய சக்தியை நமது மனதால் கணக்கிட முடியாது.
ஆனால் இந்த ஆகாய சக்தி, நமக்கு வெளியே மட்டும் இல்லை.
நமக்கு உள்ளே மிக மிக அருகே இருக்கிறது.
இதைத்தான், தன்னை உணர்ந்த ஞானிகள், தொலைவில் இருப்பதை அறிவது கடினம் இல்லை. நமக்கு  மிக மிக அருகே உள்ளதை தெரிந்து கொள்வது கடினம் என்றார்கள்.
தியானத்தில், ஒரு மனிதன், தனது மனம் கடந்த நிலையில் தான், மிக அருகே தனக்குள் இருக்கும் ஆகாய சக்தியை உணர முடியும்.
ஆகாயம் என்பது,எங்கோ தொலைவில் மட்டும் இல்லை. நமக்குள் இருந்து தான் ஆரம்பிக்கிறது.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், நமது ஒரு சிந்தனைக்கும், அதனை அடுத்த இன்னொரு சிந்தனைக்கும் இடையில் இருக்கும் ஒரு சிறிய இடைவெளி ஆகாயம் தான்
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Friday 2 December 2022

Human life understand

[12/2, 7:45 AM] Jagadeesh Chandra krishna: மயானத்தில் தம் சீடர்கள் சிலகாலம் செலவழிக்க வேண்டும் என்று புத்தர் சொல்வது வழக்கம்.

துறவறம் பூண்பதற்கு முன், மூன்று மாத காலமாவது அங்கு இருக்க வேண்டும்.

உங்களிடம் கற்றுக் கொள்ளத்தான் வந்தோமே தவிர, மயானத்திடம் அல்ல என்று அவர்கள் சொல்லலாம்.

ஆனால், புத்தர் விடமாட்டார். "பிணங்கள் எரியும் சுடுகாட்டில், "நான்" என்பது சரணாகதி அடைந்து விடும்.
அப்போது உன்னை அணுகுவது எளிது.

மூன்று மாதம், ஒவ்வொரு நாளும் எறியும் பிணங்களைப் பார்த்து வரும்போது, இந்த உலகம் உனக்காக மட்டும் இல்லை என்பது, ஒரு நாள் புரியும்.
நீ இல்லாத போதும் உலகம் இருக்கும்.

எரியும் அந்தப் பிணம் உயிரோடிருந்த அந்த கடைசிக் கணத்திலும், 
உலகம் தனக்காகவே என்று நினைத்து இருக்கும்.

அந்த மனிதன் இப்போது இல்லாதிருப்பதும் கூட உலகிற்கு தெரியாது.

ஓர் அலை தோன்றி மறைந்ததைக் கடல் கவனிப்பதில்லை.

"கவனித்துக் கொண்டே இரு.  
உலகம் உனக்காக இல்லை என்பதை உணரும்போது என்னிடம் வா.

அப்புறம் உண்மையான தியானம் ஆரம்பமாகிவிடும்....

மறைந்திருக்கும் உண்மைகள் .
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/2, 7:46 AM] Jagadeesh Chandra krishna: Buddha used to tell his disciples to spend some time in the cemetery.

 One should stay there for at least three months before becoming a monk.

 They may say that they have come to you to learn and not to the graveyard.

 But Buddha will not let go.  "In the burning pyre, the 'I' surrenders.
 Then it is easy to reach you.

 One day you will understand that this world is not just for you when you see the corpses thrown every day for three months.
 The world will exist without you.

 In that burning corpse's last moment alive,
 He thinks that the world is for him.

 The world does not even know that man is no more.

 The sea does not notice the rising and falling of a wave.

 "Be careful.
 Come to me when you feel the world is not for you.

 Then the real meditation begins….

 Hidden truths.
by 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author