Friday 2 December 2022

Human life understand

[12/2, 7:45 AM] Jagadeesh Chandra krishna: மயானத்தில் தம் சீடர்கள் சிலகாலம் செலவழிக்க வேண்டும் என்று புத்தர் சொல்வது வழக்கம்.

துறவறம் பூண்பதற்கு முன், மூன்று மாத காலமாவது அங்கு இருக்க வேண்டும்.

உங்களிடம் கற்றுக் கொள்ளத்தான் வந்தோமே தவிர, மயானத்திடம் அல்ல என்று அவர்கள் சொல்லலாம்.

ஆனால், புத்தர் விடமாட்டார். "பிணங்கள் எரியும் சுடுகாட்டில், "நான்" என்பது சரணாகதி அடைந்து விடும்.
அப்போது உன்னை அணுகுவது எளிது.

மூன்று மாதம், ஒவ்வொரு நாளும் எறியும் பிணங்களைப் பார்த்து வரும்போது, இந்த உலகம் உனக்காக மட்டும் இல்லை என்பது, ஒரு நாள் புரியும்.
நீ இல்லாத போதும் உலகம் இருக்கும்.

எரியும் அந்தப் பிணம் உயிரோடிருந்த அந்த கடைசிக் கணத்திலும், 
உலகம் தனக்காகவே என்று நினைத்து இருக்கும்.

அந்த மனிதன் இப்போது இல்லாதிருப்பதும் கூட உலகிற்கு தெரியாது.

ஓர் அலை தோன்றி மறைந்ததைக் கடல் கவனிப்பதில்லை.

"கவனித்துக் கொண்டே இரு.  
உலகம் உனக்காக இல்லை என்பதை உணரும்போது என்னிடம் வா.

அப்புறம் உண்மையான தியானம் ஆரம்பமாகிவிடும்....

மறைந்திருக்கும் உண்மைகள் .
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/2, 7:46 AM] Jagadeesh Chandra krishna: Buddha used to tell his disciples to spend some time in the cemetery.

 One should stay there for at least three months before becoming a monk.

 They may say that they have come to you to learn and not to the graveyard.

 But Buddha will not let go.  "In the burning pyre, the 'I' surrenders.
 Then it is easy to reach you.

 One day you will understand that this world is not just for you when you see the corpses thrown every day for three months.
 The world will exist without you.

 In that burning corpse's last moment alive,
 He thinks that the world is for him.

 The world does not even know that man is no more.

 The sea does not notice the rising and falling of a wave.

 "Be careful.
 Come to me when you feel the world is not for you.

 Then the real meditation begins….

 Hidden truths.
by 
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment