கயிலை சென்றதால் நீ கையிலை மணியும் அல்ல
சித்தரை வழிபடுவதால் நீ சித்தனும் அல்ல
காளி வேஷம் போடுவதால் நீ காளியும் இல்லை
கருவரைக்கு செல்வதால் நீ புனிதனும் இல்லை
வேதங்கள் ஓதுவதாலும் புத்தகங்களை ஆராய்வதாலும் நீ ஞானியும் அல்ல
சுடுகாட்டில் இருப்பதால் நீ அகோாியும் இல்லை
ருத்ராட்சங்கள் அணிவதால் நீ அடியாரும் இல்லை.
காவி உடுத்தியதால் நீ கடவுளும் இல்லை
சடை முடி வளா்ந்ததால் நீ முனிவரும் இல்லை
நீ மனிதன் அதை முதலில் உணா்ந்து கொள் . உன்னிடம் உள்ள கோபம் தாபம் தலைக்கணம் பொறாமை பணஆசை பொருள்ஆசை காமஆசை தலைமை ஆசை இவை அனைத்திலும் ஒன்று உன்னிடம் இருந்தாலும் மேற்கூறிய
எதற்கும் நீ தகுதியற்றவனாகிறாய் .
இவை அனைத்தும் உன்னிடம் இல்லாமல் இருப்பாயாகில் மேற்கூறிய அனைத்தின் மொத்த உருவமே நீயாகதான் பாா்க்கபடுவாய் .
ஆகவே வேஷங்களில் கடவுளை காணாதே உன்னுள் இருக்கும் கடவுள் பண்பை தட்டி எழுப்பு . அதை நா்த்தனம் ஆடவை. பின் அம்பலத்தை கண்டு அசைவில்லா மல் இறையோடு ஒன்றினைந்து கொள்.
சித்தா்கள் போற்றி
By
K. Jagadeesh
No comments:
Post a Comment