‘புஷ்கரம்’
என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
புனித நதிகளில் நடைபெறும்
கும்பமேளா.
‘மகாபுஷ்கரம்’ என்பது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
கும்பமேளா.
பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும்.
குருபகவான்
கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார்.
நம் நாட்டில் உள்ள முக்கியமான
12 நதிகள்
12 ராசிகளாக சொல்லப்பட்டுள்ளன.
இராசி நதி
மேஷம் கங்கை
ரிஷபம் நர்மதை
மிதுனம் சரஸ்வதி
கடகம் யமுனை
சிம்மம் கோதாவரி
கன்னி கிருஷ்ணா
துலாம் காவிரி
*விருச்சிகம்*
*தாமிரபரணி*
தனுசு சிந்து
மகரம் துங்கபத்ரா
கும்பம் பிரம்மநதி
மீனம் பிரணீதா
குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ,
அந்த ராசிக்குரிய நதியில்
பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.
அப்போது
பிரம்மா
விஷ்ணு
சிவன்
தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர்.
இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்
மற்றும்
நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.
தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.
ஈசனால்
அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டதான் தாமிரபரணி நதி.
தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு
*தாம்பிர வர்ணி*
என்று முதலில்
பெயர் சூட்டப்பட்டது.
காலப் போக்கில்
அது
*தாமிரபரணி*
என்றாயிற்று.
அகத்தியருக்காக ஈசனால்
உருவாக்கப்பட்டு, வற்றாத
ஜீவ நதியாய்
ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன.
பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை இந்நதிக்கரையில் மொத்தம்
*143 படித்துறைகள்* அமைந்துள்ளன.
இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கர்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி (ஆத்ய) புஷ்கரம் ஆரம்பம்.
23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.
இந்த
12 நாட்களும்
12 ராசிகளைக் குறிப்பதாகும்.
அதன் விபரம் வருமாறு:-
தேதி (கிழமை) ராசி
1. 12.10.2018 (வெள்ளி) விருச்சிகம்
2. 13.10.2018 (சனி) தனுசு
3. 14.10.2018 (ஞாயிறு) மகரம்
4. 15.10.2018 (திங்கள்) கும்பம்
5. 16.10.2018 (செவ்வாய்) மீனம்
6. 17.10.2018 (புதன்) மேஷம்
7. 18.10.2018 (வியாழன்) ரிஷபம்
8. 19.10.2018 (வெள்ளி) மிதுனம்
9. 20.10.2018 (சனி) கடகம்
10. 21.10.2018 (ஞாயிறு) சிம்மம்
11. 22.10.2018 (திங்கள்) கன்னி
12. 23.10.2018 (செவ்வாய்) துலாம்
ஒவ்வொருவரும் தமது
ஜென்ம ராசிக்குரிய
தேதி, கிழமையில்
நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.
12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம்.
இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதியில் பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம்.
தாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்
1. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகர்):-
நவதிருப்பதிகளுள் ஒன்றான
இந்த ஸ்தலம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது.
இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி
‘பிரம்ம தீர்த்தம்’
என்று அழைக்கப்படுகிறது.
நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு.
அவர் 11 பாசுரங்கள் பாடி மங்களா சாசனம் செய்துள்ளார்.
குருவின் அம்சமாக ஆதிநாதப் பெருமாள்- ஆதிநாதவல்லி (குருகூர்வல்லி) இங்கே அமர்ந்துள்ளனர்.
2. முறப்பநாடு:-
தாமிரபரணிக் கரையில் உள்ள
நவ கைலாயங்களுள் ஒன்றான
இந்த ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது.
இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். மகாபுஷ்கர புண்ணிய நாட்களில் இவ்விரு ஸ்தலங்களிலும் நீராடுவது அதிக மகிமையானது.
குரு தோஷம் நீங்க
நவக்கிரகங்களில் குருபகவானை
‘புத்திரகாரகன்’
என்று
ஜோதிட சாஸ்திரம் கூறும்,
குருபகவானின் அனுக்கிரகம்
நிரம்பப் பெற்ற இவ்விரு தலங்களிலும், தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம்.
குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும்
குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள்,
இங்கே வந்து நீராடினால்
மல்லிகை, முல்லை போல
வாழ்வு மணக்கும்.
புஷ்கர நீராடலால் அனைவருக்கும்
புது வாழ்வு
மலரட்டும்.
By
K. Jagadeesh
No comments:
Post a Comment