Thursday 6 May 2021

temples

[06/05, 1:00 PM] Jagadeesh KrishnanChandra: இன்று நாட்டில் சிலர் கோவில் கருவறைகளின் மேல்புறத்தில் இருக்கும் ஆண் பெண் புணர்வு சிற்பங்களை கண்டு இழிவாக பேசுகிறார்கள். அவைகள் அமைக்கப்பட்டதற்கு உன்னதமான காரணம் உண்டு......

ஆதி கால தமிழர்கள் காமத்தையோ புணர்ச்சியையோ ஒருபோதும் இழிவாக பார்த்ததே இல்லை. புதுமணத் தம்பதிகளுக்கு கலவிக்கு நாளும் நேரமும் குறித்து கொடுக்கும் அளவுக்கு காமத்தை அவ்வளவு புனிதமாக வைத்துளோம். வேளான் மக்கள் பூமியில் விதைப்பதற்கு தகுந்த காலத்தை தேர்வு செய்வார்கள். அது ஒரு புனித நிகழ்வு, அதுபோலவே ஒரு சீவனை பூமிக்கு கொண்டு வருவதற்கான விதையிடும் புனித நிகழ்வே கலவி. அவ்வளவு புனிதமான ஒன்றை இன்று இழிவு செய்து தெருவிலே வீசி விட்டார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் கலவியிலே ஈடுபட்டு தன் ஐம்புலன்களும் ஒடுங்கி, உச்ச நிலை இன்பம் அடைவார்கள். ஆனால் அது சில நிமிட நேரத்திலேயே முடிந்து விடும். பின் கருப்பிடித்து சீவன் உருவாகும். இது உடலின் கீழ்புறத்தில் நடக்கும் கலவி. இதே உவமை தான் உடலின் மேல்புறத்திலும், அதாவது சிரசு பகுதியில். நம் சிரம் தான் கருவறை, சிவத்தின் கருவறை.

நமக்கு மூன்று சுவாசம் நடைபெறும்.
இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியனவாம்.
இடகலை: சந்திர நாடி, ஒலி, பெண் தன்மை, குளிர்ச்சி.
பிங்கலை: சூரிய நாடி, ஒளி, ஆண் தன்மை, வெப்பம்.
இதையெல்லாம் பலரும் அறிந்திருப்பீர்கள்.

நம் சுவாசத்தின் பெரும்பாலான நேரத்தில் ஒன்று சந்திரகலை சுவாசம் ஓடும். அல்லது சூரிய கலை சுவாசம் ஓடும். மிக அரிதாக சில நேரத்தில் இரண்டிலும் ஒன்றாக ஒரே சுவாசம் ஓடும். அது சுழுமுனை எனப்படும். இந்த நேரத்தில் எவ்வித உலக விஷயங்களிலும் ஈடுபடாமல் சுவாசத்தில் மனதை வைத்து புருவ மத்தியில் மனதை வைத்து பழக வேண்டும்.

தினமும் கோவிலில் ஆறு கால பூசை நடக்கும் (அந்தி சந்தி காலங்கள் எனப்படும்). அந்த நேரத்தில் பூசாரி கருவறையில் ஒலியையும், ஒளியையும் கையில் வைத்து கொண்டு ஒன்றாக இயங்க செய்து சிவத்தை காட்டுவார். அதுபோல அந்த ஆறு வேளைகளிலும் நாமும் நம் சுவாசத்தில் மனதை வைத்து, இரு நாடிகளையும் ஒன்றாக்கி சுழுமுனையை பார்த்து பழகி வர வேண்டும். இப்படி பல காலம் பழகி வந்தால் சிவம் எனும் மெய்ப்பொருள் உணர்தல் உள்ளே நிகழும். இதை வள்ளல் பெருமான் தம் உரைநடையிலும் விளக்கமாக விளக்கியுள்ளார். படியுங்கள்.

முதுகு தண்டுவடத்தின் கீழ்புறத்தில் ஆணும் பெண்ணும் இணைந்தால், விந்தும் நாதமும் ஒன்றாகி, ஐம்புலனும் ஒடுங்கி, சிறிது நேரம் இன்பம் அடைந்து, சீவன் உருவாகும்.

முதுகு தண்டுவடத்தின் சிரசுப்பகுதியில் சூரியகலையும், சந்திர கலையும், இணைந்து சுழுமுனை அடைந்தால் ஐம்புலனும் ஒடுங்கி, பேரின்பம் நிகழ்ந்து, சிவன் (சிவம்) வெளிப்படும்.

இவ்விரண்டும் புணர்வே. பேரின்பத்துக்கான புணர்வை உடலுக்குள் நிகழ்த்த வேண்டும். இதை உங்களுக்கு எடுத்துக் காட்டவே கருவறை விமானத்தில் புணர்ச்சி சிற்பங்கள் வைத்திருப்பார்கள். உள்ளே பூசாரிகள் (ஒளி - ஒலி) பூசைகள் மூலமும் செய்து காட்டுவார்கள்.

இதை உங்களுக்கு உணர்த்தவே பூசாரி இடது கையில் ஒலியையும் (மணி) வலது கையில் ஒளியையும் (தீபம்) வைத்து ஆட்டி, இரண்டும் ஒன்றாகும் போது தெரியும் சிவத்தை கட்டுவார்.

கோபுரக்கலசங்கள் மூன்று இருப்பின் அவை மூன்று நாடிகளையும், ஐந்து இருப்பின் உடலின் ஐந்து கோசங்களையும், ஏழு இருப்பின் அவை உடலின் ஏழு ஆதார நிலைகளையும் குறிக்கும்.

இக்கருத்துக்களை உணர்ந்து செரித்து எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள். இறையியலின் உண்மை தன்மை விளங்கட்டும்.
By
Jagadeesh krishnan
Psychologist and International Author
[06/05, 1:03 PM] Jagadeesh KrishnanChandra: Today, some people in the country speak disparagingly of male and female sculptures on the roofs of temples.  There is a classic reason why they are set up ......

 Early Tamils ​​never looked down on lust or sexuality.  We have kept lust so sacred as to give the newlyweds a reference to the day and time of intercourse.  Agricultural people choose the right time to sow in the ground.  It is a sacred event, as well as a sacred event that sows the seeds for bringing a siva to earth.  Something so sacred was desecrated and thrown into the street today.

 A man and a woman engage in intercourse and their senses contract and reach orgasm.  But it will be over in a few minutes.  Then the nucleus is formed.  It is a combination that takes place in the lower part of the body.  The same parable applies to the upper part of the body, the head.  Our shrine is the sanctum sanctorum, the sanctum sanctorum of Shiva.

 We hold three breaths.
 Idakalai, Pingalai, Sulumunai.
 Intermediate: lunar pulse, sound, femininity, cooling.
 Pingalai: Sun pulse, light, masculinity, heat.
 Many of you are aware of all this.

 One of the most time of our breathing is the lunar breath.  Or flowing solar art breath.  Very rarely do the two breathe the same breath together at some point.  It is called the spinal cord.  At this time one should keep the mind in the breath and practice keeping the mind between the eyebrows without engaging in any worldly affairs.

 There are six daily prayers at the temple (known as the Twilight Times).  At that time the priest would hold the sound and light in the sanctuary and run together and show the red.  Similarly during those six times we also have to keep our mind on our breathing and get used to looking at the spinal cord with both nerves together.  If one gets used to this for a long time, the realization of the reality of Shiva will take place inside.  Valal Peruman has explained this in his prose.  Read on.

 When the male and female unite at the base of the spinal cord, the spermatozoa unite, the senses contract, and for a while pleasure is created, and the semen is formed.

 When the solar plexus and the lunar articulation reach the vertebrae in the head of the spinal cord, the senses shrink, bliss occurs, and Shiva (Shiva) emerges.

 Both are reunions.  The orgasm for bliss must be performed within the body.  The sanctum sanctorum will have sex sculptures on the plane just to show you this.  Inside the priests (light - sound) will also do with the prayers.

 As soon as you realize this, the priest will hold the sound (bell) in his left hand and the light (lamp) in his right hand and tie the visible red when the two are one.

 If the towers are three they represent three nerves, if five they represent the five cells of the body, and if seven they represent the seven base positions of the body.

 Realize these ideas and pass them on to future generations.  Let the truth of theology be explained.
 By
 Jagadeesh krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment