[12/12, 12:09 PM] Jagadeesh Krishnan: நீங்கள் அடிக்கடி , உங்கள் மைய நிலையை நோக்கிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்கள் . இந்த மையநிலை என்றால் என்ன..???
இதை நோக்கி எப்படிச் செல்லுவது....???
கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும் பொழுது , இருட்டைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லையே....???
இது அலுப்பாக இல்லையா...???
எண்ணங்களும் , உணர்வுகளும் மாறிமாறி வந்தபடியே இருக்கின்றன . இதை எப்படி வெறுமனே பார்ப்பது...???
ஆமாம். உண்மைதான். நீங்கள் வேகமாகச் செயல்படப் பழகியுள்ளீர்கள் .
இப்பொழுது நான் ' மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து , உங்கள் கவனத்தை காலடியில் மாத்திரம் வைத்து ஒருமணி நேரத்தில் சுமார் 20 - லிருந்து 25 அடி தூரம் மாத்திரம் நடங்கள் ' என்று சொன்னால் உங்களால் கடைப்பிடிக்க முடியுமா...???
இதுவும் ஒரு தியானம்தான்...!!!
ஆனால் , நீங்கள் என்ன சொல்லுவீர்கள்...???
"இது என்ன சோம்பேறித்தனமான வேலை...??? எவ்வளவு குறுகிய தூரம் அலுப்பான வேலை...??? " என்றுதான் கூறுவீர்கள் .
பழக்கத்தை மாற்றிக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான் . ஆனால் , விடாமுயற்சியுடன் மாற்றித்தான் ஆகவேண்டும்.
நீங்கள் தியானத்தில் முன்னேற வேண்டுமானால்...!!!
அடுத்து , உங்கள் மையநிலை என்பது #எண்ணமற்ற_உயிர்த்தன்மைதான்....!!!
வேறு ஒன்றும் இல்லை....!!!
நீங்கள் எந்த அளவுக்கு உங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒரு சாட்சியாக நின்று பார்க்கிறீர்களோ,
அப்பொழுது எண்ண ஓட்டம் குறையக் குறைய உங்கள் சாட்சித் தன்மை அதிகமாகும்.
அப்பொழுது நீங்கள் தானாகவே அந்த மைய நிலையை நோக்கிச் செல்லுவீர்கள். அவ்வளவுதான்....!!!
அந்த மைய நிலையை நோக்கிச் செல்லுவது என்றால் உங்கள் எண்ணங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுதலையாவது என்றுதான் அர்த்தம் .
கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது, இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லையே என்று கேட்கிறீர்கள் . உண்மைதான்.
ஒரு நிகழ்ச்சி ..... டேவிட் ஹும் ( David Hume ) என்ற ஒரு சிறந்த ஆங்கிலேயத் தத்துவவாதி, கீழை நாட்டு உபநிஷத்தைப் படித்துவிட்டு , தியானம் செய்ய முயற்சித்தார்.
ஆனால் அவரால் அதில் ஆழமாகச் செல்ல முடியவில்லை.
சிறிது செய்துவிட்டு , ' இது என்ன அலுப்பான வேலை...???
எண்ணங்களும் உணர்வுகளும் எப்படி மாறி மாறி வருகின்றன...??? இவற்றை வெறுமனே பார்ப்பதால் என்ன பிரயோஜனம்...??? என்று வெறுப்படைந்தார்.
இவரைப்போலத்தான் 100 - க்கு 90 சதவிகிதம் மக்கள் இருக்கிறார்கள்....!!!
அதில் நீங்களும் அடக்கம்.
தியானத்திற்கு முதல் தகுதி பொறுமை....!!!
பொறுமை இல்லாதவர்கள் இந்த வேலையற்ற வேலைக்கு வராமல் இருப்பதே நல்லது...!!!
ஹும் , இன்னும் சற்று பொறுமையாக தியானத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
அதாவது குறைந்தது சுமார் 2 - லிருந்து 3 மாதம்
அப்பொழுது எண்ணங்களும் , உணர்வுகளும் மெல்ல மெல்ல அடங்கி வருவதைக் கண்டு அவரே ( டேவிட் ஹும் ) ஆச்சரியப்பட்டிருப்பார் .
வெறுமனே சாட்சியாக நின்று பார்ப்பது கூட அவ்வளவு சுலபமல்ல.
ஏனெனில் நீங்கள் ( மனம் ) அப்படி குறுக்கே பாய்ந்து பாய்ந்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள்.
வெறுமனே பார்க்கும் பொழுது உங்களை அறியாமலே உங்களுடைய இன்னொரு மனம் குறுக்கே கண்டிப்பாகப் பாயும்.
இது பழக்க தோஷம் . இதை நீங்கள் ஒரே நாளில் இல்லை ஒரே வருடத்தில் சாதிக்க முடியாது...!!!
தேவை...
#பொறுமை_பொறுமை_பொறுமை
#விடாமுயற்சி_விடாமுயற்சி_விடாமுயற்சி.
அப்படி மனம் குறுக்கே பாயும்பொழுது அதையும் சாட்சியாக நின்று பார்த்து மெல்ல அதை அகற்றவும் . இது பலமுறை நடக்கும்.
சலித்துக் கொள்ளாதீர்கள்....!!!
பிறகு மெல்ல மெல்ல எண்ண ஓட்டம் குறைந்து , அதன் இடையில் இடைவெளி ஏற்படும்.
இந்த இடைவெளி ஏற்பட்டாலே , நீங்கள் தியானத்தில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம் .
நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒரு கட்டத்தில் ஒன்றுமே அற்ற நிலை ( Empty ) ஏற்படும்
இதற்குப் பல வருடங்கள் ஆகலாம்.
அல்லது பல பிறவிகள் ஆகலாம்.
இதைக்கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள்.
இது இறப்பு உணர்வையும், பேரின்ப உணர்வையும் ஒருங்கே தரும்.
அப்பொழுது அவர் ' தான் , ' தன்னை , இழக்கிறார் .
அப்பொழுது உங்கள் உள்ளே காரிருளை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
பிறகு மெல்ல மெல்ல மெல்லிய வெளிச்சத்தை உணர்வீர்கள்...!!!
அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது , ஜுவாலையும் இருக்காது .
அதிகாலை ஒளியைப்போல குளிர்ச்சியாக இருக்கும்.
இதைத்தான் ஹிந்துக்கள் ' சந்தியா ' (Santhiya ) என்று அழைப்பார்கள்.
இதன் அர்த்தம் ' இருட்டும் ஒளியும் கலந்த மங்கலான நிலை ' என்று பொருள்.
அப்பொழுது தான் உங்களுக்கு ' நீங்கள் யார்....??? ' என்பது விளங்கும்....!!!
#அந்த_ஒளிதான்_நீங்கள்....!!!
அப்பொழுது பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் ( Sub - ject , Object ) மறைகின்றன.
செயல்மாத்திரம் ( Predicate ) - அந்த ஒளி - தன் அறிவாய் தன் உணர்வாய், மிகுந்த விழிப்பாக மிகுந்த உணர்வாக இயங்குகிறது.
அப்பொழுது அது தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறது ( Observer is Observed by itself )
இந்த நிலைக்குப் பெயர்தான் ஞானமடைதல் என்பது
ஆக இப்படி வெறுமனே பார்ப்பது , சாட்சியாக நின்று பார்ப்பது எல்லாம் ஆரம்பத்தில் அலுப்பையே கொடுக்கும்.
ஏனெனில் ஆரம்பத்தில் இருட்டையும் , குழப்பத்தையுமே சந்திப்பீர்கள்.
மெல்ல மெல்ல இதுவே பழக்கமாகிவிடும்....!!!
இதை நீங்கள் மட்டும், நீங்களேதான் தனியே அணுக வேண்டும்.
வேறு வழியில்லை.
உங்களுக்காக , உங்கள் அன்புக்குரிய குருகூட செய்ய முடியாது....!!!
அவர் உங்களது சந்தேகங்களைத் தீர்க்கலாம் .
உங்களை ஊக்குவிக்கலாம்.
தைரியம் ஊட்டலாம். அவ்வளவுதான் .
ஒருவரது பிறப்பு, இறப்பு, ஞானமடைதல் என்பது தனிப்பட்ட சமாச்சாரம்
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மாஸ்டரின் உதவி இல்லாமல், உங்களால் ஞானமடைய முடியாது .
அடுத்து இன்னொரு விஷயம், நீங்கள் உங்களுக்குள்ளே ஆழமாகச் செல்லும்பொழுது உங்களால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள், துன்பங்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிக்கும்.
இதுதான் உங்கள் குழப்பத்திற்கு மூல காரணம்.
ஒரு கட்டத்தில் பயந்துபோய் வெளியே ஓடிவர முயற்சி செய்வீர்கள்
இப்பொழுது உங்களுக்கு ஒரு குரு மிகவும் அவசியம்.
இந்த நரகத்தைக் கடந்த அவர் உங்களுக்கு தைரியம் ஊட்டுவார்.
நீங்கள் இப்படிப் பல நரகங்களைக் கடந்துதான் சொர்க்கத்தை அடைய வேண்டும்...!!!
அப்பொழுது உங்கள் மனமே நரகமாக இருக்கிறது
அது உங்களைப் பயமுறுத்தும், பல ஆசைகளைக் காட்டும், வெளியே வா என்று உங்கள் கைகளைப் பிடித்து இழுக்கும்....!!!
அது லேசில் உங்களை தியானம் செய்ய அனுமதிக்காது.
ஏனென்றால், தியானம் என்பது அதற்குச் சாவுமணி....!!!
அப்படி இருக்கும்பொழுது தெரிந்தே அது எப்படி தியானத்தை அனுமதிக்கும்...???
அடுத்து நீங்கள் தியானத்தில் முன்னேற, இந்த உலக அவலட்சணங்களை - பதவி , படிப்பு , பணம் , பெண்இன்பம் , கௌரவம் - நீங்கள் மெல்லமெல்ல அகற்ற வேண்டும்.
நீங்கள் ஆகாயத்தில் பறக்க , பூமியை விட்டுவிடத்தான் வேண்டும்.
ஆனால் , கவலை வேண்டாம் நீங்கள் தியானத்தில் முன்னேற முன்னேற இந்த உலக அவலட்சணங்கள் புரிய ஆரம்பிக்கும்...!!!
அப்பொழுது அவை தானே விலகும் . இந்த அவலட்சணங்களுக்கு இன்னொரு பெயர்தான் அகங்காரம் ( Ego ).
உங்களுடைய சகல துன்பங்களுக்கும் இதுதான் காரணம் .
இது உங்கள் பிறப்போடு வந்தது அல்ல.
இடையில் நீங்களாகச் சம்பாதித்துக்கொண்டது.
இந்த அவலட்சணங்களை அடைய நீங்கள் எவ்வளவு சக்தியைச் செலவழித்திருப்பீர்கள்...!!!
நீங்கள் எல்லோரும் விதையாக ( Seed ) இருக்கிறீர்கள்.
நீங்கள் இப்படியே எவ்வளவு காலம் வேண்டுமானுலும் இருக்கலாம் .
10 , 000 வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை மொகன்ஜதோராவில் ( Mohen Joo Daro ) கண்டுபிடித்திருக்கிறார்கள் .
சீனாவில் பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை ஒரு குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இவை எல்லாமே இன்னும் முளைக்கும் தன்மையிலேயே இருக்கின்றன...!!!
என்ன ஆச்சரியம்....!!!
இப்படி விதையாக நீங்கள் பல நாட்டில் பல பிறவியாகப் பிறந்து பிறந்து வந்திருக்கிறீர்கள் .
ஆனால், உங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை...!!!
அதே பண ஆசை , கௌரவம் , பெண் இன்பம் அப்படித்தான்....!!!
நீங்கள் தைரியமாக உங்கள் உள்ளே சென்று ஒரு செடியாக மாற முயற்சிக்கவில்லை.
ஆனால் இது துன்பமாகத்தான் இருக்கும்.
ஏனெனில் , நீங்கள் உங்கள் ( விதை ) மேல் தோலைக் கிழித்துக்கொண்டு வரவேண்டும்.
அந்த மேல் தோல்அதாவது இந்த உலக அவலட்சணங்கள்தான்....!!!
ஆக , முதலில் நீங்கள் துன்பத்தைத்தான் சந்திக்க வேண்டிவரும்.
ஆனால், இது நிரந்தரமல்ல.
நான் சத்தியம் செய்கிறேன்
இது முற்றிலும் உண்மை.
இது என் அனுபவம்.
ஆகவே பயப்பட வேண்டாம்.
நீங்கள் அந்தத் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
உங்கள் உயிரைத் துச்சமாக மதிக்கவேண்டும். செய்வீர்களா??
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/12, 12:10 PM] Jagadeesh Krishnan: You often say, move towards your central position. What is this centrality .. ???
How to go towards this .... ???
When we close our eyes and look inside, we see nothing but darkness .... ???
Isn’t this boring ... ???
Thoughts and feelings are interchangeable. How to simply see this ... ???
Yes. Is true. You are accustomed to acting fast.
Now if I say 'step slowly, keep your attention only on your feet and walk only about 20 to 25 feet in an hour', can you follow ... ???
This is also a meditation ... !!!
But, what would you say ... ???
You would just say, "What a lazy job this is ... ??? How short a boring job ... ???"
Changing habits is not an easy task. But it must be diligently changed.
If you want to progress in meditation ... !!!
Next, your focus is on #numerable_life .... !!!
Nothing else .... !!!
To what extent do you stand as a witness to your counting flows?
Then the less the flow of thought, the greater your testimony.
Then you will automatically move towards that central position. That's all .... !!!
Towards that central state means a gradual release from your thoughts.
When you close your eyes and look inside us, you hear that we see nothing but darkness. Is true.
A show ..... David Hume, a great English philosopher, read the Upanishads below and tried to meditate.
But he could not go deep into it.
After doing a little, 'What boring work is this ... ???
How are thoughts and feelings changing ... ??? What's the point of simply looking at these ... ??? Disgusted with that.
There are 100 - 90 percent people like him .... !!!
That includes you.
The first qualification for meditation is patience .... !!!
It is better that those who do not have patience do not come to this unemployed job ... !!!
Hmmm, maybe a little more patience should follow the meditation.
I.e. at least about 2 - 3 months
Then he (David Hum) would have been surprised to see the thoughts and feelings slowly subside.
Simply witnessing is not even that easy.
Because you (mind) are accustomed to jumping across like that.
Your other mind will definitely flow across without you even knowing it when you simply look at it.
This is a bad habit. You can not achieve this in one day, not in one year ... !!!
Wanted ...
#Patience_patience_patience
#Discovery_discovery_discovery.
When the mind flows like that, stand witness to it and slowly remove it. This happens many times.
Do not be bored .... !!!
Then gradually the counting flow slows down and there is a gap between it.
When this interval occurs, it means that you are progressing in meditation.
As you go deeper and deeper into meditation this gap will increase and at some point emptiness will occur.
This may take many years.
Or may take several incarnations.
You will be very scared to see this.
It brings together the feeling of death and the feeling of bliss.
Then he loses the 'just,' himself.
Then you have to face the darkness inside you with great courage.
Then you will slowly feel the dim light ... !!!
There is no evidence for that and there will be no jealousy.
It will be as cool as the early morning light.
This is what Hindus call 'Santhiya'.
It means 'dim state mixed with darkness and light'.
Only then will you know 'Who are you .... ??? 'Is understood .... !!!
#That_light_you .... !!!
Then the viewer and the object to be seen (Sub - ject, Object) disappear.
Predicate - that light - operates with its knowledge, its consciousness, its consciousness, its consciousness.
Then it takes care of itself (Observer is Observed by itself)
Enlightenment is the name given to this state
So simply watching and witnessing like this will give you boredom in the beginning.
Because in the beginning you will encounter darkness and chaos.
Gradually this becomes a habit .... !!!
Only you, as the parent can know for sure.
There is no other way.
For you, not even your beloved guru can do it .... !!!
He can resolve your doubts.
You can motivate yourself.
Be courageous. That's all.
One's birth, death, enlightenment is personal sacrament
But at some point without the help of a master, you cannot become wise.
The next thing is, when you go deep inside yourself, all the desires and sufferings that you have suppressed will start to come up.
This is the root cause of your confusion.
At some point you will get scared and try to run out
Now you really need a guru.
He will give you courage to cross this hell.
You have to cross so many hells to reach heaven ... !!!
Then your mind is hell
It will scare you, show many desires and hold your hands to come out .... !!!
It does not allow you to meditate on lace.
Because meditation is the death knell for it .... !!!
Knowing that when it is like that, how can it allow meditation ... ???
Next as you progress in meditation, you will gradually eliminate these worldly evils - position, study, money, femininity, prestige -.
You have to leave the earth to fly in the sky.
But, do not worry as you progress in meditation you will begin to understand these worldly misfortunes ... !!!
Then they will go away by themselves. Pride (Ego) is another name for these vices.
This is the cause of all your suffering.
It did not come with your birth.
In between you earned it.
How much energy would you have expended to achieve these misfortunes ... !!!
You are all Seed.
You can be like this for as long as you want.
Seeds dating back 10,000 years have been found in Mohen Joo Daro.
The seeds have been found in a cave in China tens of millions of years ago.
All of these are still germinating ... !!!
What a surprise .... !!!
With this seed you have been born and raised in many countries.
But, there is no change in your condition ... !!!
The same desire for money, prestige, female pleasure is like that .... !!!
You are not boldly trying to go inside yourself and become a plant.
But it will be miserable.
Because, you have to tear the skin off your (seed).
That upper skin is the ugliness of this world .... !!!
So, first you have to face the suffering.
But, this is not permanent.
I swear
This is absolutely true.
This is my experience.
So do not be afraid.
You have to face that suffering with courage.
You have to value your life trivially. Will you ??
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author