Wednesday 1 December 2021

panjaban Mahadevi

[12/1, 1:23 PM] Jagadeesh Krishnan: **தாஜ் மஹாலை குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா..??!!**

**சோழ மன்னவனின் தாய்க்கு கட்டிய கோவில்.**

**பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?**

**ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு  **

**அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது!  **

**உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.**

** "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.**

**தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான்**

** கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்

**குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? **

**வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார்,**

** தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.**

** இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.**

**பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர்.  **

**தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல,**

** உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் ..
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/1, 1:24 PM] Jagadeesh Krishnan: ** Not to mention the Taj Mahal is also an expression of affection, but does the world know that there is a temple in Tamil Nadu that was built 600 years before the construction of the Taj Mahal without the rhythm of a Thai sect .. ?? !! **

 ** Temple built for the mother of the Chola ruler. **

 ** Is it only affection if it is built of marble? **

 ** Sir "Panchavan Madhavi" should go to the school temple .... the way .... when the pearl is dragged, there is no temple here, there is only one "Ramasamy temple", the temple will be locked, the street is a big one when you go there  இருப்பாரு **

 ** He was the one who guided the temple to go with him. The elder, the school temple has changed its name to Ramasamy Temple today!  **

 ** The place to be world famous is on the way. **

 ** "Pattiswaram" is a small village in the Kumbakonam district of Tanjore district.  If you stand straight at the gate of the town's Durga Temple and look straight ahead, you will see two roads dividing from left to right.  Awesome!. **

 ** This "Panchavan Madevi" is the wife of Raja Raja Chola who built the great temple of Tanjore and built a temple for her as she could not bear the division of the niece who nurtured her with great affection **

 ** "Rajendra Cholan" who won from Ganga to Gadaram.  This is probably the first temple built for Mother in the world and it is a matter of pride for us that it was built by a Tamil king.

 ** At least how many Tamils ​​know?  Is affection only counted when it is built of marble?  **

 ** Pain!  The palace of the Cholas was near this Pattiswaram, where Raja Rajan handed over the country to his son and spent his last days here, **

 ** Historians say that he often came to this temple without enduring the division of his wife. **

 ** To this day the name of the town is "Cholan Palace".  The temple, which fell into disrepair, was renovated a few years ago. **

 ** Rajendra Chola would have set up a school for a woman other than his mother if Panchavanmadevi was such a special and important woman.  **

 ** This thought would have appeared to him if he had so much love for his nephew.  This is not just a memorial to the great woman who lived in this land, **

 ** Sacred site raised by Danayan with true Thai affection.  Visit this saint at least once in your life and remember Danayan Rajendra Chola as well.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment