Wednesday 12 January 2022

Deathless

[1/12, 11:54 AM] Jagadeesh ChandraKrishnan: இறப்பு_பற்றி 

இறப்பு எப்பொழுதும் உள்ளது.
நீ அதைப்பற்றிய உணர்வின்றி இருக்கலாம். ஆனால் அது எப்போதும் நேருக்கு நேராக உடனடி சாத்தியத்துடன் உள்ளது. அடுத்த நொடியைப் பற்றி உன்னால் நிச்சயமாக கூறமுடியாது.

ஆனால் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். தான் இறந்துவிடுவோம் என்பதை யாரும் நம்புவதில்லை.

எப்போதும் அடுத்தவர்தான் இறக்கிறார். நீ எல்லா விதமான மக்களும் — சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள்-- இறப்பதை பார்த்திருக்கிறாய்.

ஆனால் நீ இறப்பதை நீ பார்த்ததில்லை. எனவே உன்னுடைய மனதின் ஏதோ ஓர் இடத்தில் மற்றவர்கள்தான் எப்போதும் இறக்கிறார்கள் என்ற கருத்து நிலைப்பெற்றுள்ளது.

ஆனால் நினைவில் கொள்! இறந்துபோனவர்களும் இதையேதான் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நீதான் அந்த மற்றவர். ஒருநாள் நீ இறந்துவிடுவாய், உன்னை கல்லறைக்கு சுமந்துசெல்லும் மக்கள் இறப்பின் உடனடி தன்மையை சுத்தமாக உணரமாட்டார்கள்.

அது எப்போதும் உள்ளது – உன்னுடைய நிழலைப்போல உள்ளது.

மக்கள் எப்போதும் தள்ளிபோட்டுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் நாளை தியானம் செய்ய நினைப்பார்கள் — நாளை ஒருபோதும் வருவதில்லை.

செய்வதற்கு வேறு விஷயங்கள் பல உள்ளன, உனக்கு தியானம் செய்ய நேரம் இல்லை.

இப்போது வேறு வழியில்லை, நாளை என்பது முடிந்துவிட்டது, உனது கைகளில் இருப்பது இந்த வினாடி மட்டுமே......இதுதான் உண்மை,

இப்போது நீ ஈடுபட்டுகொண்டிருந்த சிறிய, முட்டாள்தனமான விஷயங்களை மறந்துவிடலாம். சீட்டு விளையாடிகொண்டும், கிரிக்கெட்  விளையாட்டு போட்டியை பார்த்துகொண்டும், 

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற உணர்வேயில்லாத மக்கள் கோடிகணக்கில் உள்ளனர்.

நீ அவர்களை கேட்டால், நேரத்தை கழித்து கொண்டிருப்பதாக கூறுவார்கள். சிறந்த செயல்! நேரம் உன்னைக் கழித்துக் கொண்டிருக்கிறது,

ஆனால் நீ நேரத்தை கழித்துக் கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருக்கிறாய்.

ஆனால் காலம் ஒவ்வொரு வினாடியும் உன்னை கொன்று கொண்டு இருக்கிறது.

இறப்பதற்குள் செய்யவேண்டிய ஒரே காரியம், உன்னை அறிந்துகொள்வதே.

இறப்பு இவ்வளவு பக்கத்தில் உள்ளபோது நீ உன்னுடைய சொந்த இருப்பை பற்றி தெரிந்து கொள்ளாமல் இனிமேலும் இருக்கமுடியாது.

இறப்பின் நெருக்கத்தன்மை உனக்குள்ளே இருக்கும் இறப்பற்ற தன்மையை உணர வழி செய்கிறது.

அதுதான் தியானத்தின் முழுக் கலை. ஆழமாக உள்ளே உனது இருப்பின் மையம் வரை செல்வது.

நீ ஆச்சரியமடைவாய், வியப்பாய், உனது இருப்பின் மையத்தில் நீ நிரந்தரமானவன் என்பதை உணர்வாய் .

இப்போதே தியானத்தில் இறங்கு .

ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/12, 11:55 AM] Jagadeesh ChandraKrishnan: இறப்பு_பற்றி

 Death is always there.
 You may not be aware of it.  But it is always straightforward with immediate possibility.  You can not be sure about the next moment.

 But we continue to live.  No one believes he will just die.

 Always the next one dies.  You have seen all kinds of people - boys, young and old - die.

 But you never saw him die.  So somewhere in your mind the notion that others are always dying has persisted.

 But remember!  The dead were thinking the same thing.

 To them you are that other.  One day you will die and the people who carry you to the grave will not cleanly realize the immediate nature of death.

 It always is - it is like your shadow.

 People are always procrastinating and they will think of meditating tomorrow - tomorrow will never come.

 There are so many other things to do, you do not have time to meditate.

 Now there is no other way, tomorrow is over, only this second is in your hands ...... this is the truth,

 Now you can forget the little, stupid things you were involved with.  Playing cards and watching a cricket match,

 There are millions of people who have no idea what they are doing.

 If you ask them, they will tell you that time is running out.  Great action!  Time is running out for you,

 But you think you are wasting time.

 But time is killing you every second.

 The only thing to do before dying is to get to know yourself.

 When death is so on the side you can no longer be without knowing about your own existence.

 The intimacy of death makes way for you to feel the immortality within you.

 That is the whole art of meditation.  Going deep inside to the center of your being.

 You will be amazed, amazed, and realize that you are eternal in the center of your being.

 Get down to meditation right now.
By

 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment