Monday 28 October 2019

how enjoy life after retirement

[29/10, 07:37] 98 41 121780: There is life. First, you have a right to be understood, namely fellow men, your retirement pay are simply natural to you, yet retirement does not hold, it is still a long way to go to time-giving is, you can use the Do or waste going-that is the next areas . Do not always accept that you have retired first. Humans are just giving you rest, not nature.
You have plenty of time now, and you have to have a clear vision of how to use this time to live for yourself. That means you have lived for others, and now you have got time to live life for yourself. You should be aware of it now. Only then will it become clear that you will be using your entire life for the next time and how to use it to your advantage. If not, you will be wasting away on the coming times and you will be left without knowing yourself. Instead, if you use it all, you can know for yourself how to deal with it in the face of your death.
Don't be afraid of death, don't think it's some bad thing, it's just another part of life, it's not going to happen to you right now, someday it will happen to you, but it's time to prepare yourself for how vigilant you face death. I'm going to tell you how to prepare yourself for it. That is, whether you are going to welcome your death with gusto and joy, or accept it with sorrow and sorrow. The decisions you make can determine how happy or sad your life will be after your ice break.It is this decision that will make you aware of your self and by knowing it your death is going to be a mourning or a happy event. It is this decision you make that will make your rest days more meaningful and active every day. You need to decide this now, because you have your life. You have your time, and you should try to use it only for yourself. When you live for the joys of others and the sorrows of others, consider only your pleasures, and change the fears of who will say what. Whatever they say, they are not going to carry your happiness or sorrow. If you are happy, you will be able to breathe inward and if you are sleepy, you will carry the most joy inside and pretend to be comforted. Live for yourself with the utmost vigilance, let alone put an end to it, even though it has lived so far for others, opinions and others. Try now to get to know your self. This is the last chance given by nature for you. If you miss this, you will not get the next chance. That is why I say, and do not miss this, even in your death. It's okay if you think I'm teaching you selfishness, but I don't care about it at all. Because what you were thinking and doing was not some kind of selfishness. But it is selfishness that you do not know and you are living in your self-awareness. So you don't understand that it's selfish. That's why I say that selfishness you what it has accomplished so your self ennananmai got so far, sorrow and suffering, others fear that's life had with your life towards it slightly back and look at the know, the question I have for you villakkaventiya need do not have the I say, life is far from the point, let's put an end to it. This is the last chance you will have to decide on a new beginning, from here on out, and how it should be for life, and even if you want to, the next opportunity may not be available.So I say, you have to decide if you are going to use this last opportunity to educate your self or not. When I say to achieve self, you will leave your house and immediately take the monk and beg the street and tell the tide. Don't be mistaken. To know your self, you have enough space, but all you have to do is say the same thing: you have always lived in harmony with the opinions of others, but first of all, ask only your opinion. For this you do not have to buy asceticism, you do not have to go to anyone's ashram, do not wear saffron, do not wear evening garlands, do not worship all the time, do not go to temples, do not go to temples.
Only listen to what you say to yourself. You only need to follow the way it is shown, and before you listen to the words of your self, to understand what it says, you need to have a deep peace of mind, create it first, and you will begin to feel the voice of your self. Only follow what your self says, and it will still guide you.
By 
 Jagadeesh Krishnan
[29/10, 07:37] 98 41 121780: முதலில் நீங்கள் ஒன்றினை புரிந்து கொள்ளுங்கள், ஓய்வு பெற்றபின்பு என்றால் பொருள் என்ன. என ஒரு கம்பெனியோ அல்லது பணிசெய்யும் இடமோ உங்களுக்கு ஒரு வயது வந்த உடன் உங்களின் சேவையை நீங்கள் செய்தது போதும் என்று நினைத்து உங்களுக்கு ஒரு நிரந்தர விடுப்பு தருகிறது அவ்வள்வுதான், அதற்க்காக நீங்கள் ஓய்வு பெற்று விட்டர்கள் என்று பொருளா? நிச்சயமாக இல்லை, நீங்கள் உங்களுடைய ஓய்வு என்பதனை எப்படி எடுத்து கொள்கின்றீர்கள் என்பதனை பொறுத்து தான் அதற்கு பின்பு நீங்க வாழ்கின்ற வாழ்க்கை இருக்கின்றது. முதலில் நீங்கள் ஒன்றினை சரியாக புரிந்து கொள்ளவேண்டும், அதாவது சக மனிதர்கள் தான் உங்களுக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள், அவ்வளவுதான், இயற்க்கை உங்களுக்கு இன்னமும் ஓய்வை கொடுக்கவில்லை, அது இன்னமும் உங்களை வெகுதூரம் போவதற்கான நேரத்தை கொடுத்து இருக்கின்றது, இதனை நீங்கள் பயன்படுத்தி கொள்கின்றீர்களா அல்லது வீணாக்க போகிறீர்களா என்பதில் தான் இருக்கின்றது அடுத்த பகுதி. முதலில் நீங்கள் உங்களுக்கு ஓய்வு கிடைத்து விட்டது என்பதனை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளாதீர்கள். மனிதர்கள் தான் உங்களுக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள், இயற்கையல்ல. 
உங்களுக்கு இப்பொழுது நிறைய நேரம் இருக்கின்றது, உங்களுக்காக வாழ்வதற்கு, இந்த நேரத்தை எப்படி எல்லாம் உபயோக படுத்துவது என்பதனை பற்றி ஒரு தெளிவான பார்வை இருக்க வேண்டும். அதாவது இதுவரையில் மற்றவர்களுக்காக நீங்கள் வாழ்ந்து இருக்கின்றீர்கள்,இப்பொழுதான் உங்களுக்கான வாழ்க்கை வாழ்வதற்க்காக உங்களுக்கு நேரம் ஆனது கிடைத்து இருக்கிறது. இப்பொழுதே நீங்கள் அதனை பற்றிய விழிப்புணர்ச்சி அடையவேண்டும். அப்பொழுதுதான் உங்களால் அடுத்து வருகின்ற காலங்களையெல்லாம் எப்படி எல்லாம் உங்களுக்காக மட்டும் முழுமையாக பயன்படுத்தி கொள்வது என்கிற தெளிவு பிறக்கும். இல்லை என்றால் நீங்கள் அடுத்து வருகின்ற காலங்களையும் இதனை போன்று வீணாக கழித்து விட்டு,உங்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே போய்விடுவீர்கள், அதாவது இறந்து விடுவீர்கள். அதற்கு பதிலாக, இதனை எப்படி எல்லாம் பயன்படுத்தினால், உங்களின் மரணம் வரும் பொழுதும் அதனை எப்படி விழிப்புணர்ச்சியுடன் எதிர்கொள்ளலாம் எனப்தனை நீங்களாகவே தெரிந்து கொள்ளலாம். 
மரணம் என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டாம், அது எதோ கெட்டவார்த்தை என்று நினைக்கவேண்டாம், அது வாழ்க்கையின் இன்னொரு பகுதி, அது இப்பொழுதே உங்களுக்கு நிகழ்ந்து விட போவதில்லை, அது ஒருநாள் நிச்சயமாக உங்களுக்கு ஏற்ப்படும், ஆனால் அப்படி ஏற்படுகின்ற, மரணத்தை எவ்வளவு விழிப்புணர்ச்சியுடன் எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்வதற்கான நேரம் இது. அதற்கு எப்படி நீங்கள் உங்களை தயார் செய்து கொள்வது என்பதனை பற்றி தான் நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். அதாவது உங்களின் மரணத்தை, நீங்கள் விழிப்புணர்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் வரவேற்க போகின்றீர்களா, அல்லது விழிப்புணர்ச்சியற்று, துக்கத்துடன் ஏற்று கொள்ள போகின்றீர்களா என்பது தான் இது. நீங்கள் எடுக்கின்ற முடிவுகள் தான் உங்களின் பனி ஓய்வுக்குப்பின் உங்களின் வாழ்க்கை ஆனது எவ்வ்ளவு சன்தோஷமாக இருக்க போகிறதா அல்லது துக்கத்தை தரப்போகின்றதா என்பதனை நிர்மாணிக்க கூடியது. அதனை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும் இந்த தீர்மானம் தான் உங்களை உங்களின் சுயத்தை அறிவதற்கும் அதனை அறிந்து கொள்வதன் மூலமாக உங்களின் இறப்பு என்பதே ஒரு துக்கமான நிகழ்வாக இருக்க போகிறதா அல்லது சந்தோசமான நிகழ்வாக இருக்க போகின்றது என்பதனை தீர்மானிக்கும். நீங்க எடுக்கின்ற இந்த தீர்மானம் தான் உங்களின் ஓய்வு நாட்களை ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ளதாகவும், செயல் ஆக்கம் கொண்டதாகவும் மாற்றும். நீங்கள் தான் இத்தனை இப்பொழுதே தீர்மானிக்க வேண்டு, ஏன் என்றால் உங்களிடம் தான் உங்களின் வாழ்க்கை இருக்கின்றது. உங்களிடம் தான் உங்களின் நேரம், இருக்கின்றது, அதனை நீங்கள் தான் சரியாக உங்களுக்ககாக மட்டுமே பயன்படுத்தி கொள்வதற்கு முயற்சி செய்யவேண்டும். மற்றவர்களின் சந்தோஷங்களுக்காகவும் மற்றவர்களின் துக்கங்களுக்காகவும் வாழ்ந்தது போதும், முழுமையாக உங்களின் சந்தோசங்களை மட்டுமே கருத்தினில் கொள்ளுங்கள், யார் என்ன சொல்லுவார்கள் என்கின்ற அச்சத்தினை முதலில் மாற்றுங்கள். யார் என்ன சொன்னாலும் அவர்கள் உங்களுடைய சந்தோசத்தினையோ துக்கங்களையோ சுமக்க போவது இல்லை, வேண்டும் என்றால் நீங்கள் சொந்தோசமாக இருந்தால் உள்ளுக்குள் வயிற்றெரிச்சல் படுவார்களே தவிர, நீங்கள் தூக்கமாக இருந்தால் உள்ளுக்குள் மிக மிக சந்தோசத்தை சுமந்து கொண்டே வந்து உங்களுக்கு ஆறுதல் சொல்வது போல் நடிப்பார்கள் அவ்வளவுதான், அதனால் தான் சொல்லுகிறேன் நீங்கள் இப்பொழுதுதான் மிக மிக விழிப்புணர்ச்சியுடன் உங்களுக்காக மட்டுமே வாழவேண்டும், மற்றவர்களின், கருத்துகளுக்காகவும், மற்றவர்களுக்காகவும் இதுவரையில் வாழ்ந்தது போதும், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இப்பொழுதே வைத்து விடுங்கள். உங்களின் சுயத்தினை தெரிந்து கொள்வதற்கு இப்பொழுதேனும் முயற்சி செய்யுங்கள் இது தான் உங்களுக்காக இயற்கையால் கொடுக்கப்பட்ட கடைசி சந்தர்ப்பம். இதனையும் நீங்கள் தவற விட்டு விடீர்கள் ஏனன்றால் உங்களுக்கு அடுத்த சந்தர்ப்பம் கிடைக்காது. அதனால் தான் சொல்லுகின்றேன், பின்பு இத்தனையும் தவறவிட்டு விட்டு உங்களின் மரணத்தில் கூட விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்து விடாதீர்கள். நான் உங்களுக்கு சுயநலத்தை, கற்று தருகிறேன் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை, அதனை பற்றி எல்லாம் எனக்கு கவலையும் இல்லை. காரணம் நீங்கள் எதனை சுயநலம் இல்லை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு செய்துகொண்டு இருந்தீர்களோ அதுவமே ஒருவிதமான சுயநலம் தான். ஆனால் அது சுயநலம் என்பதே உங்களுக்கு தெரியாத அளவிற்கு நீங்கள் உங்களின் சுயதில் விழிப்புணர்ச்சி அற்றவர்களாக வாழ்ந்து இருக்கின்றீர்கள் அவ்வளவுதான். அதனால் அது சுயநலம் என்பதே உங்களுக்கு புரியவில்லை. அதனால் தான் சொல்லுகிறேன் அந்த சுயநலத்தினால் நீங்கள் எதனை சாதித்தீர்கள், அதனால் உங்களின் சுயத்திற்கு என்னநன்மை கிடைத்தது இதுவரையில், துக்கங்களும் துன்பங்களும், மற்றவர்களுக்கு பயந்து பயந்து தான் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தீர்கள், உங்களின் வாழ்க்கை அதை நோக்கி சற்றே திரும்பி பார்த்தாலே தெரிந்துவிடும், இதனை நான் உங்களுக்கு விள்ளக்கவேண்டிய அவசியமே இல்லை.அதனால் தான் சொல்லுகிறேன் இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை இதனுடன் முற்று புள்ளி வைத்து விடுங்கள். ஒரு புதிய ஆரம்பத்தினை நீங்கள் தான் இங்கே இருந்து ஆரம்பிக்க வேண்டும், அது எப்படி பட்ட வாழ்க்கையாக இருக்கவேண்டும் என்பதனையும் நீங்கள் நிச்சயமாக முடிவெடுக்க வேண்டிய கடைசி சந்தர்ப்பம், இதற்குமேல் நீங்கள் விரும்பினாலும் அடுத்த சந்தர்பம் ஆனது கிடைக்கவே போவது இல்லை. அதனால் தான் சொல்லுகிறேன் நீங்கள் இந்த கடைசி சந்தர்ப்பத்தை உங்களின் சுயத்தை அறிவதர்காக பயன்படுத்தி கொள்ள போகிறேர்களா இல்லையா என்பதனை நீங்கள் தான் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.நான் சுயத்தை அடைய வேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் நான் ஏதோ உங்களின் வீட்டை விட்டு விட்டு உடனடியாக சன்யாசத்தை வாங்கிக்கொண்டு தெரு தெருவாக பிச்சை எடுத்துக்கொண்டு அலையை சொல்கிறேன் என்று தவறாக நினைத்து கொள்ளவேண்டாம். உங்களின் சுயத்தை அறிவதற்கு, நீங்கள் இருக்கின்ற இடம் போதுமானது, ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் அதாவது, நீங்கள் இதுவரையில், எப்பொழுதுமே மற்றவர்களின் கருத்துக்கு இணங்க தான் வாழ்ந்து வந்தீர்கள், ஆனால் முதன் முதலாக உங்களின் கருத்தை மட்டுமே கேளுங்கள் என்று சொல்லுகிறேன் அவ்வளவுதான். இதற்க்காக நீங்கள் சன்யாசம் எல்லாம் வாங்க வேண்டியது இல்லை, யாருடைய ஆசிரமத்திற்கும் போக வேண்டியது இல்லை, காவி உடுத்தி வேண்டியது இல்லை, மாலை அணிய வேண்டியது இல்லை, சதா சர்வகாலமும், கடவுளை நினைத்து பூஜைகளும் செய்யவேண்டியது இல்லை கோவில்களுக்கும் போகவேண்டியதும் இல்லை, உங்களின் உள்ளுக்குள்ளேயே தேடுங்கள் தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்,
நீங்கள் உங்களின் சுயம் ஆனது என்ன சொல்கிறதோ அதனை மட்டுமே கேளுங்கள். அது என்ன வழி காண்பிக்கின்றதோ அதனை மட்டும் பின்பற்றுங்கள், அதற்குமுன்பு உங்களின் சுயத்தின் வார்த்தைகளை கேட்பதற்கு அதாவது அது என்ன சொல்கின்றது எனப்தனை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஆழ்ந்த அமைதி தன்மை தேவை, அதனை முதலில் உருவாக்குங்கள், அப்புறம் உங்களின் சுயத்தின் குரலை நீங்களே உணர தொடங்குவீர்கள். அப்புறம் உங்கள் சுயம் என்ன சொல்கிறதோ அதனை மட்டுமே கடைப்பிடியுங்கள் அதுபோதும், அதுவே உங்களுக்கு வழிகாட்டும்.
by
Jagadeesh Krishnan

No comments:

Post a Comment