Friday, 8 April 2022

mind

[4/7, 9:59 PM] 98 41 121780: சாதாரணமாக மக்கள் தங்கள் சரியான மனநிலையில் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் அதை சந்தேகிப்பது இல்லை.

அதுதான் பிரச்சனை அவர்கள் பேசும்போது தங்கள் முதலாளியிடம் மனைவியிடம் காதலியிடம் வேலைக்காரனிடம் நண்பனிடம் என ஒவ்வொருவரிடமும் பேசும்போது முகமூடியை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

சில நேரங்களில் திடீரென கோபம் பீறிட்டு வெளியே வந்துவிடுகிறது.

கோபம் என்பது ஒரு தற்காலிக பைத்தியம் பிடித்த நிலைதான் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

வெகுவாக சிலர் தாம் அப்படி நடந்து இருக்க கூடாது என்று சொல்கிறார்கள் இது கூட ஒரு சரியான மனநிலை தான்.

ஆனால் அதை மூடி மறைத்துவிட்டு மேலும் முகமூடிகளை போட்டு தம்மை சரியானவர்களாக காட்டி கொள்வார்களே அதிகமாக உள்ளார்கள். இது ஒரு பைத்திய மனநிலை.

கலில் கிப்ரான் நண்பர்களில் ஒருவர் மன நோயாளி ஆகி விட்டார். அவர் மீது அன்பு கொண்டு கருணை கொண்டு கலில் கிப்ரான் அவரை பார்க்க சென்றார்.

மனநலக் காப்பகத்தில் உள்ளே ஒரு மரத்தடியில் அவருடைய நண்பரான நோயாளி அங்கு அமர்ந்திருந்தார். கலில் கிப்ரான் நண்பரிடம் கேட்டார் நீ ஏன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறாய் என்று தெரிகிறதா?

நண்பர் சிரித்தார் பிறகு சொன்னார் வெளியில் இருக்கும் பெரிய பைத்தியக்கார விடுதியை விட்டு விலக நான் விரும்பியதால் இங்கே நான் வந்து இருக்கிறேன். மேலும் இங்கு இந்த காப்பகத்தில் நான் அமைதியாக சமாதானமாக இருக்கிறேன். இந்த இடத்தை நீ பைத்திய காப்பகம் எனலாம் ஆனால் இங்கு யாரும் பைத்தியம் இல்லை.

மேலும் அவர் சொன்னார் ஒரு உண்மையான பைத்தியம் 'தான்' ஒரு பைத்தியம் என்று யோசிக்க மாட்டான்.
அப்படிப்பட்டவர்கள்தான் வெளியே அதிகமாக உள்ளார்கள்.

ஒரு பைத்தியத்திற்கு 'தான்' பைத்தியம் என்று அறியாது இருக்கும் நிலையில் தான் அது உண்மையாகவே பைத்தியமாக உள்ளது.

தனக்குப் பைத்தியம் என்று தெரிந்த ஒரு நபருக்கு உண்மையிலேயே பைத்தியமாக இருக்க வாய்ப்பில்லை.

பிறகு வெளியில் வந்து கலில் கிப்ரான் இப்படி சொன்னார்... வெளியுலகத்திற்கும் பைத்தியக்கார காப்பகத்துக்கும் உள்ள வித்தியாசம் நடுவில் இருக்கும் ஒரு சுவர் மட்டுமே. ஆனால் காப்பகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு பைத்தியம் என்று அறிந்திருக்கிறார்கள்.

முடிவான உண்மை இது தான்.

உண்மையாகவே மனநலத்துடன் இருப்பவர்கள் 'தான்' ஒரு பைத்தியமாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள்.

முற்றிலும் பைத்தியமாகி போனவர்கள் 'தான்' ஒரு பைத்தியம் என்பதை அறியாதிருப்பார்கள்.

காப்பாகத்திற்கு வெளியில் உள்ளவர்கள் நிலை இதுதான்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[4/7, 10:06 PM] 98 41 121780: Normally people think they are in the right mood.  They do not doubt it.

 That’s the problem they keep changing the mask when they talk to their boss, wife, girlfriend, servant, friend, everyone.

 Sometimes the anger suddenly erupts and comes out.

 Psychologists say that anger is a temporary state of insanity.

 Too many people say they should not have behaved like that and this is even a perfect mindset.

 But there are many who hide it and put on more masks to make themselves look perfect.  This is a crazy mood.

 One of Khalil Gibran's friends has become mentally ill.  Kylie Gibran went to see him with love and mercy on him.

 His friend the patient was sitting there under a tree inside the psychiatric ward.  Khalil Gibran asked a friend, "Do you know why you are here?"

 The friend laughed and then said I came here because I wanted to leave the big madhouse outside.  And here in this archive I am quietly at peace.  You may call this place a crazy archive but no one here is crazy.

 And he said he would not think that a real crazy 'just' is a crazy one.
 Such people are more out there.

 It's really crazy when you do not know that 'just' is crazy for a madman.

 A person who knows he is crazy is unlikely to be really crazy.

 Then came out and Khalil Gibran said ... the only difference between the outside and the insane archive is a wall in the middle.  But those in the archive know they're crazy.

 This is the ultimate truth.

 Those who are truly mentally ill know that ‘just’ is a madman.

 Those who are completely insane may not know that ‘just’ is a madman.

 This is the situation of those outside the archive.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment