Tuesday 20 November 2018

Jagadeesh Krishnan psychologist and International Author

100 வயது வரை வாழ வைக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ரகசியம் பற்றி தெரியுமா?..
______________________
காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி. 90 வயதான மிடுக்கான இன்னும் பலம் பெற்ற ஒரு முதியவ்ர் கூறிய ரகசியம் இது.

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே..

என சித்தர்கள் இதனைப் பற்றி பாடியிருக்கிறார்கள். இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. ஆனால் அவற்றை உண்ணும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவ்ற்றிலும் விஷத்தன்மை உண்டது. நீங்கள் அதனை எந்த நேரத்தில் எப்படி நீங்கள் சாப்பிட வேண்டும் என்று மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி :👌
------------
இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.

இஞ்சி உண்ணும் முறை
-----------------------------------------
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும்வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

சுக்கு :👌
----------
சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும்.

சுக்கு உண்ணும் முறை :

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.
7
கடுக்காய் :👌
-----------------
கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிடுங்கள். ஏனெனில் கொட்டை நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.சதைப் பகுதியை இடித்து7 தூள் செய்து💐 கொள்ளுங்கள்.

கடுக்காய் உண்ணும்
-----------------------------------
முறை :
-------------

இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.இது கபத்தை சமன் செய்யும்.மலச்சிக்கல் குணமாகும். இந்த மூன்றையும் தினமும் செய்து வாருங்கள். எந்த நோயும் உங்களை எட்டி கூட பார்க்காது என்பது உறுதி.

அனைவருக்கும் பகிருங்கள்.

அழகும் ஆரோக்கியமும்.
By
K. Jagadeesh

No comments:

Post a Comment