Thursday 22 November 2018

Jagadeesh Krishnan psychologist and International Author

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

1.தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, what s app" massage மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
நாம் இறப்பதற்கு முன்பே நம்முடைய உறுப்புகளை சாகடித்துவிடுவோம்.*

*"பாசிடிவ் உணவுகளை உண்ணுங்கள்"*

நம்முடைய ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது.

நல்ல ஆரோக்கியம் என்பது நல்ல உணவு, நல்ல சுற்றுச்சூழல், நல்ல மனநிலை, முறையான பழக்கவழக்கங்கள் ஆகிய 4 அம்சங்களை சார்ந்துதான் இருக்கிறது.

எந்த உணவை சாப்பிட வேண்டும், எப்படி உண்ண வேண்டும் என்பதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் நாம் இதை கடைபிடிப்பதே இல்லை.

உணவில் பாசிட்டிவ் உணவு, நெகட்டிவ் உணவு என்று 2 வகை உண்டு.

எளிதில் சீரணமாகக்கூடிய, வயிற்றுக்கு பிரச்னை தராத உணவுகள் - பாசிட்டிவ் உணவுகள்.

அதற்கு நேர்மாறானவை நெகட்டிவ் உணவுகள்.

பாசிட்டிவ் உணவுகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, மசாலா, அச்னோமோட்டோ, டால்டா போன்ற ஒவ்வாமை பொருட்கள் கலந்த நெகட்டிவ் உணவுகளையே இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம்.

தண்ணீருக்கு நிகராக வேறு ஒரு பானம் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் தாகம் எடுக்கும் சமயங்களில் எல்லாம் நாம் பெரும்பாலும் ரசாயனம் கலந்த அன்னிய குளிர்பானங்களையே விரும்பி அருந்துகிறோம்.

இதனால் போதிய அளவு தண்ணீர் உடலுக்கு கிடைப்பதில்லை.

இதுபோன்ற காரணங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு இன்னல் அடைகிறோம்.

காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கூட காபி குடிக்கிறோம்.

மேலும் பன், பிஸ்கட் என்று சாப்பிடுகிறோம்.

நாள் முழுவதும் வடை, பஜ்ஜி என்று நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறோம்.

இன்றைய சூழலில் நம்முடைய உழைப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் எடுத்துக்கொள்ளும் உணவோ அதிகமாக இருக்கிறது.

இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்ததல்ல.

இந்த பழக்கம் தொடர்ந்தால் நாம் இறப்பதற்கு முன்பே நம்முடைய உறுப்புகளை சாகடித்துவிடுவோம்.

இதற்கு நம்முடைய நாக்கை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

நோய் வந்தால் நாம் சந்தோஷப்பட வேண்டும்.

ஏனென்றால் நம் உடலில் கழிவுத்தன்மையும், நச்சுத்தன்மையும் வெளியேறும் நிகழ்வுதான் நோய்ஆகும்.

நாம் உண்ணும் உணவு கழிவாக மாறிய பிறகு அது வெளியேற்றுகிறது.

கழிவுகள் அதிகமாக சேரும்போது மலக்குடல் சுத்தமாக இருப்பதில்லை.

அதுபோல நுரையீரலும் சுத்தமாக இருப்பதில்லை.

அதில் இருக்கின்ற 90,000 சிரைகளில் 60,000 சிரைகளில் கார்பன்-டை-ஆக்சைடு படிந்து விடுகிறது.

சருமத்தில் கூட கழிவுகள் தங்கிவிடுகின்றன.

இவையெல்லாம் வெளியேறுகிற நிகழ்வுதான் நோய்.

கழிவுகள் சேராமல் தற்காத்துக் கொள்வதுதான் ஆரோக்கியம்.

*"இதற்கு நம்முடைய நாக்கை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.*வாழ்க வளமுடன்.
By
K. Jagadeesh

No comments:

Post a Comment