Tuesday 13 April 2021

mind power

[14/04, 9:10 AM] Jagadeesh KrishnanChandra: ஆழ்மனம் என்பது நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தி ..நாம் நமது வெளிமனம் மூலமாக தேர்ந்தெடுத்து அவற்றை பற்றி தீவிரமாக சிந்திக்கின்ற போது அவை அப்படியே  ஆழ்மனதிற்கு செல்கின்றது. ஆழ்மனம் என்பது ஈர்ப்புவிதியின் செயல்பாடு போன்றது .ஈர்ப்பு விதியின் கோட்பாடுகளில் மறைந்திருக்கும் மாபெரும் உண்மையே  ஆழ்மனதின் செயல்பாடுகளை வெளிமனம் மற்றும் எண்ணங்கள் மூலமாக தீர்மானிப்பதே  ஆகும்..ஆழ்மனத்தின் சக்தி (subconscious mind) அல்லது ஈர்ப்பு விதியின் ஒரு செயல்திட்டம் .நன்றி..
 
*ஒவ்வொரு மனிதருக்கும் ஆழ்மனம் நம்புவது தான் நிஜம். *
 
ஆழ்மனம் நம்பும்படியே நாம் உணர்கிறோம். அதன்படியே நாம் பாதிக்கப்படுகிறோம். அது பொய்யான தகவலாகவே இருந்தாலும் உண்மை என்று ஆழ்மனம் எடுத்துக் கொண்டால் அதுவே  உண்மையாகிறது. அதன்படியே  அனுபவம் அமைகிறது.
 
    ஒரு வேடிக்கைக் கதையை நீங்கள் படித்திருக்கலாம். நன்றாக ஆரோக்கியமாக உள்ள ஒருவன் காலையில் உற்சாகமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறான். முன்பே பேசி வைத்துக் கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் போகிற பாதையில் ஒவ்வொருவராகக் சந்திக்கிறார்கள்.
 
    முதலாமவன் "என்ன ஆயிற்று. ஏன் என்னவோ போலிருக்கிறாய்?" என்று கேட்கிறான். நம் ஆள் "இல்லையே நன்றாகத் தானே இருக்கிறேன்" என்கிறான்.
 
  சிறிது தூரம் கழித்து இன்னொரு நண்பன் அவனிடம் "என்ன உடம்பு சரியில்லையா?" என்று கேட்கிறான்.
 
    இப்படியே ஒவ்வொருவரும் அவன் உடல்நிலை பற்றி மோசமாகவே கேட்க நம் ஆள் நிஜமாகவே நோய்வாய்ப்பட்டு படுத்து விடுகிறான். இது கதை ஆனாலும் நிஜமாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதே.
 
    நாம் மற்றவர்கள் கருத்து மூலமாகவும் நம் தவறான புரிந்து கொள்ளல் மூலமாகவும் நம் ஆழ்மனதிற்குத் தவறான அபிப்பிராயங்களை உண்மை என அனுப்பினால் அதுவே நம் வாழ்வில் உண்மையாகி விடும். "நான் அதிர்ஷ்டம் இல்லாதவன். எனக்கு நல்லது எதுவும் அமையாது" என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கும் மனிதர்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவே கடைசி வரை இருந்து விடுகிறார்கள்.
 
    எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம்> பலவீனம்> கவலை> தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம்> வலிமை> தன்னம்பிக்கை> மகிழ்ச்சி> உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[14/04, 9:10 AM] Jagadeesh KrishnanChandra: Deepness is the greatest power within us..when we choose through our outer mind and think seriously about them they just go deeper.  Depth is like the law of gravity .The great truth hidden in the principles of the law of gravity is that the functions of the subconscious mind or subconscious mind are a function of the law of gravity .Thank you.
 
 * It is true that every human being believes deeply.  *
 
 We feel deeply believable.  We suffer accordingly.  Even if it is false information, if it is taken deeply, it becomes true.  The experience is set accordingly.
 
     You may have read a funny story.  Someone who is in good health leaves the house excited in the morning.  His friends, who had been talking before, meet him one by one along the way.
 
     First "What happened. Why do you look like something?"  Asks.  Our guy says, "No, I'm fine."
 
   After a while another friend asked him "What's wrong?"  Asks.
 
     This is how our guy gets really sick and lies down when everyone hears badly about his health.  This is the story but it can really happen in the life of each of us.
 
     If we send misconceptions to our depths through the opinion of others and our misunderstandings, that will be true in our lives.  "I'm unlucky. I 'm not good at anything," he says.
 
     So be very careful with the information you take over and send inside.  If the information sent by the superior is constantly Fear> Weakness> Anxiety> Inferior thoughts, they will be strengthened and reported as events that will definitely come into your life.  On the contrary, if the upper mind continues to send messages like courage> strength> self-confidence> happiness> excitement, it is sure to reflect that in your real life as well.
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment