Friday, 16 July 2021

yourself

[16/07, 9:33 PM] Jagadeesh KrishnanChandra: கேள்வியாளர்:

நான் மிகவும் கருப்பாக இருக்கிறேன். பெரும்பாலான மக்கள் சிவப்பாக இருப்பவர்களை விரும்புகிறார்கள். நான் எவ்வாறு அவர்கள் மனதில் இடம்பிடிப்பேன்?


    ஜெகதீஷ் கிருஷ்ணன்
   

தற்போது கிடைக்கும் சிறப்பான
 சில அழகுசாதன கிரீம்கள் உங்கள் தோலின் நிறத்தை சிவப்பாக மாற்றக்கூடும் என நான் நினைக்கிறேன்.

ஆனால் அது உங்கள் பிரச்சனையை தீர்க்குமா?

நீங்கள் அப்போதும்கூட  மற்றவர்களால் கவனிக்கப்படவேண்டும், சமூகத்தில் பிரபலமானவராக இருக்கவேண்டும் என விரும்புவீர்கள், அப்போதுகூட நீங்கள் ஒரு உயர்ந்த நிலையில் இருக்க, கௌரவமானவராக இருக்க விரும்புவீர்கள்.

அந்த பெருமைமிக்கவராக இருக்கவேண்டுமென்ற ஒவ்வொரு கோரிக்கையிலும், ஒவ்வொரு போராட்டத்திலும் எப்போதும் துயரமெனும் ஒரு வலி, ஒரு வேதனை  கூடவே இருக்கும்.

நீங்கள் பிறரால் பாராட்டப்படுபவேண்டும், பிரபலமானவராக இருக்கவேண்டும் என ஆசைப்படும்வரை, உங்கள் கல்விமுறை உங்களை அழித்துவிடும், ஏனெனில், அது நீங்கள் இந்த சமூகத்தில் யாரோ ஒருவராக பிரபலமடைய உதவி செய்யும், இந்த சமூகமும் நன்றாக சீர்கெட்டு, பாழாகிக்கிடக்கிறது.

நாம்,  நம்முடைய பேராசை மூலம், பொறாமை மூலம், பயத்தின் மூலம் இந்த சீரழிந்த சமூகத்தை உருவாக்கி உள்ளோம்.

அதை புறக்கணிப்பதன் மூலமாகவோ, அல்லது அதை ஒரு மாயை என கூறுவதன் மூலமாகவோ அதை சீர்செய்ய முடியாது.

சரியான கல்விமுறையால் மட்டுமே நம்முடைய பேராசை, பயம், நம்முடைய உடைமையாக்கிக் கொள்ளும் குணம் (பொருளீட்டும் ஆசை) இவற்றை முற்றிலும் துடைத்தெறியமுடியும், அதன் மூலமாக நாம் அடிப்படையிலையே ஒரு புத்தம் புதிய கலாச்சாரத்தை உருவாக்க முடியும், ஒட்டுமொத்தமாக ஒரு மாறுபட்ட உலகை நிறுவமுடியும்.

மனம் எப்போது தன்னைத்தானே புரிந்து கொள்ள விரும்புகிறதோ, அதன்மூலம் துயரத்திலிருந்து விடுபடுகிறதோ, அப்போதுதான் சரியான, ஒரு முறையான கல்விமுறை ஏற்படக்கூடும்.
வழங்கியவர்
    ஜெகதீஷ் கிருஷ்ணன்
    உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[16/07, 9:34 PM] Jagadeesh KrishnanChandra: Questioner:

 I am very black.  Most people like people who are red.  How do I keep them in mind?


     Jagadeesh Krishnan
   

 The best currently available
  I think some cosmetic creams may change the color of your skin to red.

 But will it solve your problem?

 You still want to be noticed by others and to be popular in the community, and even then you want to be in a high position and be respectable.

 There will always be a pain, a torment that will always be miserable in every demand and every struggle to be that proud.

 As long as you want to be admired and popular by others, your education system will destroy you, because it will help you become famous as someone in this community, and this community is well degraded and ruined.

 We, through our greed, through jealousy, through fear have created this degenerate society.

 It cannot be remedied by ignoring it, or by calling it an illusion.

 Only with the right education can we completely eradicate our greed, fear, and possession (meaning and desire) so that we can create a fundamentally new culture and establish a whole different world as a whole.

 Only when the mind wants to understand itself and thereby get rid of misery can a proper, formal education system emerge.
  by
     Jagadeesh Krishnan
     Psychologist and International Author

No comments:

Post a Comment