[3/21, 8:06 PM] Jagadeesh ChandraKrishnan: மனதின் பழக்கம்
மனதால் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதை மாற்றுவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை!
பழக்கம் என்பது நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே செயலை இயந்திரத்தனமாக பிரக்ஞை இன்றி செய்வது தான்!
இப்படி தான் மனிதர்களில் 95% மக்கள் செய்கிறார்கள். ஒரு காரியத்தை தினசரி திரும்ப திரும்ப செய்யும் போது அதுவே உங்கள் பழக்கமாகி போகிறது. அது உங்கள் ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறது.
இப்படி 20 வருடங்கள் ஒரு பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை மாற்றுவது என்பது மரணவலியை உண்டு பண்ணும். இதற்கு பதிலாக என் உயிரை கூட விட தயார் என கூறுவார்கள்.
சக்கரை வியாதி உள்ளவர்கள் வயதான காலத்தில் இப்படிதான் கூறுவார்கள். பழகிய உணவு பழக்கத்தை மாற்ற இயலாது.
நீங்கள் உங்கள் பெற்றோர்களால் கோயிலுக்கு சென்று சிலை வழிபாட்டை மேற்கொண்டு 25 வருட வாலிப பருவத்தில் உங்கள் சுய சிந்தனையாலும் பகுத்தறிவினாலும் சிலை வழிபாட்டில் பயனில்லை அது நம்பிக்கையின் அடிப்படையிலான ஒன்று என புரிந்து கொண்டாலும் கூட உங்களால் ஒருகாலும் உங்களை மாற்றி கொள்ள இயலாது.
அப்படி மாற்றி கொள்ள மிகுந்த தைரியம் வேண்டும்! பெரும்பாலான அறிவாளிகளுக்கு தைரியம் கிடையாது. படிப்பறிவு இல்லாதவனிடம் உள்ள தைரியத்தில் கால் பாகம் கூட படித்தவனிடம் கிடையாது.
ஆகவே தான் மருத்துவர், பொறியாளர், தத்துவவாதி, விஞ்ஞானி அனைவருக்கும் சுய சிந்தனை பகுத்தறிவு இருந்தும் நடைமுறைப்படுத்தும் தைரியம் இல்லை.
அவனால் தன் மனதை மாற்றி கொள்ள இயலவில்லை. சிறுவயது பழக்கம் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது. மேலும் இந்த உலகில் 90% மக்கள் சிலைகளை வழிபடும் போது நீங்கள் மட்டும் தியானம் செய்வது பைத்தியகார செயல் போல உங்களுக்கு தோன்றுகிறது!
ஆமாம். கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியகாரன்தான்!
மனம் ஒருவழியில் தன்னை பழக்கப்படுத்தி கொண்ட பின் அதிலேயே ஆழமாக போய்விடும். மாற்றத்தை விரும்பாது. புதுமையை கண்டு பயப்படும். மனம் உங்கள் மீதான தனது அதிகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டு விடாது. உங்கள் துயரங்கள் வேதனைகளுக்கு காரணமே உங்கள் மனம் தான்.
மனம் தன்னை இழக்க ஒரு போதும் ஒத்துக்கொள்ளாது. தியானம் என்பது மனதிற்கு சாவு மணி. பிறகு எப்படி அது உங்களை தியானத்தில் ஈடுபட செய்யும்? பல வித எண்ணங்களை உண்டாக்கி தியானம் செய்ய விடாமல் தடுக்கும்.
100க்கு 80% பேர் தியானத்தை சோம்பேறிகளின் வேலை என கருதுகிறார்கள். அந்த முட்டாள்கள் அந்த நேரத்தை பணம் சம்பாரிக்கும் பயனுள்ள வழியாக ஆக்குவார்களாம்! இது தான் மனித மனம்.
மனதை மாற்றி புதிய மாற்றத்தில் வாழ்வதற்கு மிகுந்த வைராக்கியம் வேண்டும். தியானம் செய்வதன் மூலம் மனதை நிறுத்த சில வருடங்கள் ஆகலாம். இதுதான் உண்மை. தேவை விடாமுயற்சி!
அப்படி முடியாவிட்டால் மனதின் பழக்கத்தில் சிக்கி இப்படியே இயந்திரத்தனமாக வாழ்ந்து வேதனையோடும் கவலைகளோடும் கோவிலுக்கு சென்று பொய்யான நம்பிக்கையும் ஆறுதலும் பெற்று ஏதோ வாழ்ந்து மடியுங்கள்.
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/21, 8:06 PM] Jagadeesh ChandraKrishnan: The habit of the mind
Making a habit with the mind and changing it is not an easy task!
The habit is that you do the same thing over and over again mechanically without fuss!
This is what 95% of people do. When you repeat a thing daily, it becomes your habit. It's deeply ingrained in you.
If you have a habit like this for 20 years then changing it can be fatal. Instead they will say that my life is more than ready.
This is what people with diabetes say in old age. It is not possible to change the old eating habits.
You can never change yourself even if you go to the temple with your parents and do idolatry and during your 25 years of adolescence idolatry is useless because of your self-consciousness and rationality and it is something based on faith.
It takes a lot of courage to change like that! Most intellectuals do not have the courage. The educated do not have even a quarter of the courage of the uneducated.
That is why not all physicians, engineers, philosophers, and scientists have the courage to practice self-thinking from rationality.
He could not change his mind. Childhood habits are ingrained like hibiscus. And when 90% of the people in this world worship idols, meditating on yourself alone seems like a crazy act to you!
Yes. The one who built Kovanam in the city where Kovanam was not built is a madman!
Once the mind has accustomed itself in a certain way it will go deeper into it. Does not want change. Afraid of innovation. The mind does not give up its power over you so easily. Your mind is the cause of your sorrows and pains.
The mind never agrees to lose itself. Meditation is the death knell for the mind. Then how does it make you engage in meditation? It prevents many thoughts from forming and meditating.
80% to 100% consider meditation to be the work of the lazy. Those fools can make that time an effective way of making money! This is the human mind.
It takes a lot of zeal to change the mind and live in a new change. It may take a few years to stop the mind from meditating. this is the truth. Perseverance required!
If that is not possible then get caught up in the habit of the mind and live mechanically like this and go to the temple with pain and worries and get false hope and comfort and live something folded.
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment