[3/23, 9:01 AM] Jagadeesh ChandraKrishnan: பிரபஞ்சம் முழுவதும்
பரவியிருக்கும் ஒரு சக்தி.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற, எல்லா இடத்திலும் பரவியுள்ள ஒரு சக்தி தான் என்னையும், உங்களையும், இந்த தேசத்து மக்களையும், மரங்களையும், பூக்களையும், பறவைகளையும், மிருகங்களையும், எல்லா உயிர்களையும் ஆட்டி அசைத்துக் கொண்டிருக்கிறது.
பிரபஞ்சம் முழுவதையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
இந்த சக்தி தான் இடைவிடாது பூமியை சுழற்றிக் கொண்டிருக்கிறது.
சூரியன் எழவும், சந்திரன் தாழவும் இந்தச் சக்தி தான் காரணம். சூர்ய உதயம் மிகுந்த பிரமிப்பை தருகிறது.
எத்தனை துல்லியமான கணக்கு. இதை யார் எழுப்புகிறார்கள். எதனால் இந்தக் கோளம் அக்னியை உமிழ்ந்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இதனுடைய தன்மை பூமிக்கு எத்தனை சுகத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இது இங்கிருக்கவும், அது அங்கு நகரவும் யார் விதித்தது.
இந்தச் சுடர்களெல்லாம் யார் படைப்பு. மெல்ல மெல்ல வெளிச்சம் பரவி கொண்டிருக்கிறதே, இது எவரால், பூக்கள் மலர்கின்றவே யாரால். பறவைகள் இத்தனை அழகாகப் பாடுகின்றனவே.
யார் இந்த சக்தியைக் கொடுத்தது ?
இதற்கு ஆதி காரணம் என்ன?
எங்கிருக்கிறது இந்த சக்தி ?
எதனுடைய விகசிப்பு இது.
எல்லா இடத்திலும் ஒரு சக்தி நீக்கமற நகர்ந்து கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் ஒவ்வொரு இடத்திலும் அசைந்து கொண்டிருக்கிறது.
இதற்கு என்ன பெயர் ?
இந்த சக்தியை என்னவென்று
அழைப்பது. இதோடு எப்படி பேசுவது ?
இந்தச் சக்திக்குத் தான் கடவுள் என்கிற தன்மை. சக்திக்கு உருவமில்லை.
அதற்கு உருவம் நிர்ணயித்தாலும் தவறில்லை. உருவம் வேண்டுமெனில் உருவத்தோடு, உருவம் வேண்டாமெனில் உருவம் இல்லாமலும் இருக்க முடியும்.
கடவுள் என்கிற தன்மைக்கு இதுதான் என்று பெயர் வைக்கவே முடியாது.
கடவுள் என்கிற தன்மை எல்லாம் கடந்தது. எல்லாமாக இருப்பது.
எனக்கு புரியவில்லையே இன்னும் தெளிவாகச் விளக்க முடியுமா?
காற்று எங்கும் இருக்கிறது. ஆனால் நம் கண்ணுக்குத் தெரியவில்லை.
ஆனாலும் என்ன, நாம் உள்ளுக்குள் இழுத்து நுரையீரலுக்குள் நிரப்பி ஜீவிக்கிறோம் அல்லவா, அதே போல எங்கும் இருக்கிற சக்தியை நாம் ஸ்வீகரித்து இழுத்து நமக்குள் தேக்கி வைத்துக் கொள்கிறோம்.
நமக்குள் இருக்கிற சக்தியும், வெளியே இருக்கிற சக்தியும் ஒன்றையொன்று உரசுகிறது. அப்போது ஏற்படுகின்ற பரமானந்தத்தை நாம் அனுபவித்து உணரலாம்.
உருவமற்ற உன்னோடு நீ யார் என்று கேட்டால் என்ன பதில் சொல்வாய். உருவமாக உன்னை பார்க்க முடியாதா என்று மனம் ஏங்க மனமே உருவத்தைக் கற்பனை செய்கிறது.
நீ என்னவாக நினைக்கிறாயோ,
நீ விரும்பியபடியே உனக்கு காட்சிதரும்.
கடவுள் என்கிற தன்மை எல்லாம் கடந்தது. எல்லாமாக இருப்பது.
கடவுளைக் கண்டவர்கள் பிரச்சாரம் செய்வதில்லை. தெரிந்ததாக, அறிந்ததாகப் பொய் சொல்கிறவர்கள் தான் பிரச்சாரம் செய்கிறார்கள்.
கடவுளை அறிந்தவர் எவருக்கும் பயந்து
கை கட்டுவதில்லை.
சூன்யத்தை நுகர்ந்தவன்
இறுதியில் சூன்யமே
ஒன்றுமில்லாத ஒன்றே.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/23, 9:01 AM] Jagadeesh ChandraKrishnan: Across the universe
A force that spreads.
It is an omnipresent, omnipresent force that haunts me, you, the people of this land, the trees, the flowers, the birds, the animals, and all life.
The whole universe is moving.
It is this force that is constantly rotating the earth.
This power is due to the rising of the sun and the setting of the moon. Sunrise is awe-inspiring.
How many accurate accounts. Who raises this. That is why this sphere is emitting fire and keeping us alive.
Its nature is giving so much pleasure to the earth. Who imposed it to be here and move it there.
Who is the creator of all these flames. Gradually the light spreads, by whom it is, by whom the flowers bloom. The birds sing so beautifully.
Who gave this power?
What is the Adi reason for this?
Where is this power?
This is the evolution of what.
Everywhere a force is moving indelibly. Invisibly swaying in every place.
What is the name of this?
What is this power
To call. How to talk to it?
It is to this power that God is. Power has no image.
There is nothing wrong with setting the figure for it. Image can be with image if you want and without image if you don't want image.
This is not the name of the character of God.
The nature of God is past everything. Being everything.
Can you explain more clearly what I do not understand?
The wind is everywhere. But invisible to our eyes.
But what's more, we live by pulling in and filling our lungs, as well as by absorbing and retaining energy that is everywhere.
The force within us and the force outside are rubbing against each other. We can experience and feel the bliss that occurs then.
What would you answer if the imageless asked you who you are? The mind longs to see you as an image and the mind imagines the image.
What do you think,
Will show you what you want.
The nature of God is past everything. Being everything.
Those who have seen God do not preach. Only those who lie knowingly and knowingly propagate.
Fear anyone who knows God
Do not tie the hand.
The one who consumes emptiness
In the end it is null
Nothing but one.
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment