கடவுள்: கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். நீ
கழுதையாகப் பிறந்து, நாள்
முழுவதும்
பொதி சுமப்பாய்.
உனக்கு சிந்திக்கும்
திறனே கிடையாது. புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்.
கழுதை: கழுதையாகப் பிறந்து 50
ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20
ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். நீ மனிதனின்
வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள்
வாழ்வாய்.
நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம்.
15 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: குரங்கைப்
படைத்து அதனிடம்
சொன்னார். நீ மரங்களில்
கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய்.
20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்.
குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: மனிதனைப் படைத்தார். நீ
சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய்.
உன்
அறிவைப்
பயன்படுத்தி எல்லா உயிர்களையும்
உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள்
உயிர் வாழ்வாய்.
மனிதன்: சாமி. 20 வருடம்
எனக்கு ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாமென்று சொன்ன 30
வருடங்களையும், நாயின் 15
வருடங்களையும், குரங்கின் 10
வருடங்களையும் எனக்குத் தாருங்கள்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
அன்றிலிருந்து மனிதன் 20
வருடங்கள்
மனிதனாகவும், பின் திருமணம்
செய்து 30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும்,
குழந்தைகள் வளர்ந்த பின் 15
ஆண்டுகள்
நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும்,
கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன்
அல்லது மகள் வீடு சென்று பேரக்
குழந்தைகளை மகிழ்விக்கிறான் .
Author
K.Jagadeesh
NO:90,
Mouna SwamyMadam Street,
Venkatapuram,
Ambattur,
Chennai
– 600053.
Tamil
Nadu, India.
Mobile:
+91-009841121780. 009543187772, 009171617660.
Land
line:+91-044-33460196.
Email:
jagadeeshkri@gmail.com
No comments:
Post a Comment