நிச்சயமாக, ஆனால் அதனை நான் உங்களுக்கு எப்படி விளக்குவது என்பது எனக்கு தெரியாது, ஆனால் அதனை சில விளக்கங்களை கொண்டு புரிய வைக்க முயற்சிக்கின்றேன், நீங்கள் எப்பொழுது எல்லாம் தூங்கு கின்றீர்களோ அப்பொழுது எல்லாம், நீங்கள் உங்களுடைய ஆழி நிலையான தூக்கத்திற்கு போகும் பொழுது காண்பது அதாவது கனவு என்பதே இன்னொரு பரிமாணத்திற்கு செல்கின்றீர்கள் என்பதனை காட்டுவது தான், நீங்கள் அனைவரும் கனவுகளை பற்றி தெரிந்து இருப்பீர்கள், ஆனால் இந்த கனவுகள் என்பது சில நேரங்களில் மிக மிக பெரியதாகவும், சில நேரங்களில் மிக சிறியதாகவும் இருப்பதாக கனவுகளை கண்டு இருப்பீர்கள், ஆனால் அவைகள் அனைத்துமே நிகழாவதற்கான நேரம் ஆனது இரண்டு விநாடிகளுக்கு குறைவானது என்றால் உங்களால் நம்ப முடியுமா, ஆனால் உண்மையில் எந்த விதமான கனவும் அதிக பட்சமாக இரண்டு வினாடிகளுக்குள் தோன்றி மறைந்து விடுகின்றது. அப்படி என்றல் அங்கே நேரம் ஆனது செயல் படவில்லை என்பது கண்கூடான விசயம், அதாவது உங்களின் உடலை பொறுத்தவரையில் எப்பொழுதும் இருக்கின்ற நேரம் ஆனது உங்களின் கனவினில் செயல் படவில்லை. அதாவது அது ஒன்று நேரத்திற்கு கட்டு படாமல் இருக்க வேண்டும், அல்லது அதனுடைய வேகமானது நேரத்தின் உடைய வேகத்தை விட மிக விரைவானதாக இருக்க வேண்டும், இல்லை என்றால், நாம் அதனை காண்பதற்கே நமக்கு நேரம் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்,ஆனால் அது எடுத்துக்கொள்ள கூடிய நேரம் இரண்டே இரண்டு வினாடிகள் தான், அப்படியென்றால் அங்கே என்ன நடக்கின்றது, அது எப்படி சாத்தியமாகிறது, அப்படி என்றால் நம்முடைய கனவு ஆனது நம்முடைய காலத்திற்கு உட்படுவதே இல்லை என்று தெரிகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் நாம் வேறு ஒரு பரிமாணத்தில் இருந்தால் தான் அது சாத்தியமானதாக முடியும், இல்லை என்றால் அது சாத்திய படாது. அப்படி என்றால் நம்முடைய முப்பரிமாண எல்லையை கடந்த ஒன்று இருக்கின்றது என்பது தெரிகின்றது, அதாவது நேரம் என்பது தான் நான்காவது பரிமாணம் என்பது நமக்கு தெரிய வில்லை என்றாலும், தெரிந்து கொள்ளுங்கள், நேரம் என்பது நான்காவது பரிமாணம், ஏன் என்றால், நாம் நேரத்தை உணரமுடியும், அதில் வாழ முடியும், ஆனால் அதனை கடந்து செல்ல முடியாது, அதனால் தான் நாம் மூன்றாம் பரிமாண உலகத்தில், நான்காம் பரிமாணமான நேரத்திற்கு உட்பட்டே வாழ்கின்றோம், நாம் அதனை கடந்து செல்ல முடியாது, ஆனால் இந்த கனவானது எப்படி காலத்தை அதாவது நேரத்தை கடந்து செல்கின்றது, அப்படி என்றால் அதற்கு நேரத்தை கடந்து செல்வதற்கான வழி தெரிந்து இருக்கின்றது, ஒன்றிற்கு நேரத்தை கடந்து செல்வதற்கு, தெரிந்து இருக்கின்றது என்றால் அது நிச்சயமாக நேரத்திற்கு குறைந்த பரிமாணத்தில் இருப்பதற்கு சாத்திய கூறுகள் இருக்காது, அப்படி என்றால் அது வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கவேண்டும், அப்படி என்றால் அந்த பரிமாணம் எனப்படுகின்ற வெளி அதாவது ஐந்தாவது பரிமாணத்தில் இருந்தால் தான் அது சாத்தியம் ஆகும், அப்படி என்றால் அது நிச்சயமாக ஐந்தாவது பரிமாணத்தில் தான் இருக்க வேண்டும். அதாவது நீங்கள் கனவு காணும் பொழுது அந்த பரிமாணத்திற்கு சென்றால் தான் அது சாத்தியம் ஆகும். இல்லை என்றால் உங்களுடைய கனவு சாத்தியமற்ற ஒன்று. அதனால் தான் ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்தாம் பரிமாணத்தில் தன்னை அறியாமலேயே வாழ் கின்றான் என்பது உண்மையான ஒன்று ஆகும்.
No comments:
Post a Comment