Tuesday, 21 January 2020

ஒருவர் இறக்கையில் உண்மையில் என்ன நடக்கிறது (அவரது ஆத்மா மற்றும் ஆவிக்கு)?

முதலில் இறப்பு என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள், நாம் முப்பரிமாண உலகத்தில் வாழ்கிறோம், அதாவது, உயரம், அகலம், நீளம் என்கின்ற பரிமாணங்கள், இதனை தாண்டிய பரிமாணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது, ஆனால் இருக்கிறது, அது, நான்காம் பரிமாணம் நேரம், ஐந்தாவது பரிமாணம் வெளி, ஆறாவது பரிமாணம் இயக்க வெளி, ஏழாவது பரிமாணம் எண்ண் வெளி, எட்டாவது பரிமாணம் சித்த வெளி இதனை போன்று பல பரிமாணங்கள் இருக்கின்றன, நாம் மூன்றாவது பரிமாணம் கொண்ட உலகத்தில் நான்காவது பரிமாணம் என்கின்ற நேரம் பற்றி அறிந்து இருக்கின்றோம், ஆனால் நேரத்தை பற்றி கேட்டால், நமக்கு தெரியும் ஆனால் தெரியாது. அதாவது விளக்க முடியாது. அது போன்று தான், இந்த இஸ்த்தூல உடல் ஆனது மூன்று பரிமாணத்திற்கு உட்பட்டு எடுக்கின்ற நிலைகளான குழந்தை பருவம், இளைய பருவம், முதுமை பருவம் என்பது இந்த முப்பரிமான வளர்ச்சி கொண்டது, அதனால் அதனை பார்க்க நம்மால் முடியும். ஆனால், இறப்பு என்பது நான்காவது பரிமாணமாகிய நேரத்தை சார்ந்தது, நமக்கு இதனை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர, அதனை விவரிக்க முடியாது, அப்படி விவரிக்க வேண்டும் என்றால், நமக்கு நேரம் என்பதை பற்றிய சுய புரிதல் இருக்க வேண்டும், அப்போது தான் நம்மால் அதனை பற்றி விளக்கினாலும் புரிந்து கொள்ள முடியும், அதனால் தான் இதனை பற்றி அறிந்தவர்கள், சில மறை முகமான குறிப்புகளை மட்டுமே கொடுத்து விட்டு சென்றார்களே தவிர, முழுமையாக விளக்கவில்லை, காரணம்நமக்கு முப்பரிமாணங்களுக்கு அப்பால் உள்ள நேரத்தை பற்றியே முழுமையாக தெரியாது என்பதால் தான், அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதறகாக மட்டும் இல்லமால் அதனை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் இந்த முப்பரிமாணத்திலேயே நீங்கள் உங்களின் வாழ்க்கையை முடித்து கொள்ள கூடாது என்பதற்காகவும் தான். அதனால் தான் ஞானம் அடைந்த எவருமே இதற்கான பதிலை கூற மாட்டார்கள், அதனால் அது அவர்களுக்கு தெரியாது என்பதனால் அல்ல, உங்களுக்கு புரியாது என்பதனால் தான். நான் உங்களுக்கு இதனை பற்றி விளக்க முடியும், ஆனால் அது உங்களுக்கு புரியுமா என்று எனக்கு தெரியாது சிறிதளவு விளக்குகிறேன் புரிகிறது என்றால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விட்டு விட்டுவிடுங்கள், இறக்கின்ற உயிர் ஆனது இந்த பூமிக்கு சொந்தமான நான்கு பஞ்ச பூதங்களான நிலம், நீர்,காற்று , நெருப்பு, இவைகளை மட்டும், இங்கே விட்டு விட்டு ஐந்தாவதான வெளி என்பது அதனுடைய இடமானவெளிக்கு சென்று விடும். அங்கே சென்று ஒரு அலை வரிசையில் தன்னுடைய இடத்தில இருக்கும், எப்போது வரையில்இந்த நான்கு மூலங்களும் முழுமையாக அதனுடன் கரைய வில்லையோ அதுவரையில் இது திரும்ப திரும்ப அந்த நான்கு மூலங்களுடன் தொடர்பினில் இருந்து கொண்டே இருக்கும், எப்போது அந்த நான்கு மூலங்களும், அதன் ஐந்தாவது மூலத்தின் அலை வரிசையில் வருகின்றதோ அப்போது அது திரும்பவும் இந்த நான்கு மூலங்களுடன் சேர்ந்து உருவம் எடுக்கும், அதாவது மீண்டும் பிறக்கும், ஏதுவரையில் இந்த நான்கு மூலங்களும் முழுனையாக கரைய வில்லையோ அதுவரையில் இந்த நிகழ்வு திரும்ப திரும்ப நிகழ்ந்து கொண்டேனாஇருக்கும் . இந்த நான்கு மூலங்களும்கரைந்து விட்டால், இந்த ஐந்தாவது மூலம் ஆனது வேறு ஒரு பரிமாணத்திற்கு போய்விடும். இப்போதைக்கு இதனை மாட்டும் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு ஒருநாள் உங்களுக்கு அந்த ஐந்தாவது மூலம் என்னவாகுமென்பதனை பற்றி விரிவாக விளக்கு கின்றேன். புரிய வில்லை புரிய வில்லை என்றாலும் பரவா இல்லை, இது ஒரு உணர கூடிய தன்மை கொண்ட ஒன்று அதனால் வார்த்தைகளால் இதனை விளக்க முடியாது,உங்களுக்கு அனுபவம் ஏற்படும் போது இது தெளிவாக புரியும். அதனால் கேள்வி கேட்பதை விட்டு விட்டு அதனை தேடுவதறகு முயற்சி செய்யுங்கள்

No comments:

Post a Comment