முதலில் உண்மையாக காதலித்தால் அல்லது பொய்யாக காதலித்தல்என்ற ஒன்று எப்பொழுதுமே இல்லை. காரணம் காதல் என்பதே நீங்கள் நினைப்பது போன்ற அரை குறைவான ஒரு செயல் அல்ல அதனை நீங்கள் உணரும் பொழுதே அது நிறைவடைகிட்ணறது. அப்புறம் அதில் நீங்கள் திருமணம் என்ற ஒன்றை நோக்கி செலுத்தும் பொழுது அது ஒரு கட்டாயமான செயலாக மாறிவிடுகின்றது, அதாவது காதல் என்கின்ற உணர்வை ஒரு பொருளாகா மாற்றிவிடுகின்றீர்கள். அப்படி என்றால் அது எப்படி காதலாக இருக்கும். அது ஒரு உணர்வற்ற ஒன்றாக தான் மாறி நிற்கும். அதாவது அதன் தன்மையை நீங்கள் சுருகுகின்றீர்கள். அதாவது நீங்கள் எதனை காதலிக்கின்றீர்களோ அது ஒரு பொருளை போன்று ஜடத்தன்மைகொண்டதாக மாற்ற முயற்சிக்கின்றீர்கள். ஒரு உணர்வு ஆனது ஒரு ஜடத்தன்மை கொண்ட ஒரு பொருளாக மாறும் பொழுது அதன் உயிர் தன்மையானது அழிக்க படுகின்றது. அப்புறம் எப்படி அது ஒரு உயிர்தன்மை கொண்ட ஒன்றாக இருக்கும். காதல் என்பது ஒரு உணர்வு அது ஒரு பொருள் அல்ல இதனை நீங்கள் உணர்கின்ற பொழுது இதற்க்கான விடை தெரியும். ( love is not a thing, its feelings )
129 பார்வைகள்
No comments:
Post a Comment