Tuesday, 21 January 2020

சின்ன சின்ன அசவுகரியங்களை தாங்கி கொள்ளாததால் சிலரின் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் பெரும்பாலும் இப்படி பட்ட கோழைகளை மன்னிப்பதே இல்லை, காராணம், இந்த வாழ்க்கையின் மதிப்பினை தெரிந்து கொள்ளாத இவர்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பது நன்று என்று தான் சொல்லுவேன். காரணம் வாழ்க்கை என்றால் அதில் துன்பமே வரக்கூடாது என்றால் அவர்கள் பிறக்கவே கூடாது. அப்படி பிறந்தால் நிச்சயமாக துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறித்தான் வரும் அது இயற்க்கையின் நியதி. அதனை விட்டு விட்டு எப்பொழுது பார்த்தாலும் துன்பமே வரக்கூடாது என்று நினைத்தால் அவர்களை போன்ற முட்டாள்கள் இருப்பதை விட இல்லமால் இருப்பதே நன்று.
முதலில் நாம் துன்பம் அடைகின்றோம் என்றால் அதற்கு காணம் நம்முடைய அளவிற்கு மீறிய ஆசைகளில் மட்டுமே. நம்முடைய தேவைகள் என்ன ஆசைகள் என்ன என்பனதனையே இவர்கள் புரிந்துகொள்ள வில்லை என்பதனைதான் இது காட்டுகின்றது. நாம் அனைத்திற்கும் ஆசை படலாம் ஆனால் அதற்கு வேண்டிய முழுமையான உழைப்பே கொடுக்க மாட்டேன் ஆனால் அனைத்து ஆசைகளும் நிறைவேறிவிட வேண்டும் என்று நினைப்பது தான் இந்த பயித்தியக்காரர்களின் வாதம். இது வாதத்திற்கு வேண்டும் என்றால் சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது. முதலில் எதற்கு ஆசைப்படவேண்டும் என்றாலும் அதனை முடிப்பதற்கு நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், அப்படி வளர்த்துக்கொள்ளாமலேயே அதனை நாம் செய்ய முடியவில்லை என்று சொன்னால் இவர்களை போன்ற சோம்பேறிகள் இருப்பதை விட இறப்பதே மேல் என்று சொல்லுவேன். உழைப்பு ஒன்று தான் நாம் எதனை அடையவேண்டும் என்பதனை பூர்த்தி செய்வது, உழைப்பே இல்லாமல் சோம்பேறியாக இருந்து விட்டு அப்புறமா எனக்கு எதுவுமே நடக்கவில்லை என்று மற்றவர்களை குறை கூறிக்கொண்டு இருப்பவர்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே உலகத்திற்கு நன்மை பயக்கும். அதனால் இந்த சோம்பேறிகளை பற்றி இனிமேல் கேள்வி கேட்காதீர்கள்.

No comments:

Post a Comment