முதலில் இந்த ஆத்திகன் மற்றும் நாத்திகன் இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை போன்றவர்கள் தான், நீங்கள் நாத்திகராக இருந்தாலும், ஆத்திகராக இருந்தாலும் இரண்டுமே ஒன்று தான் காரணம், நீங்கள் ஆத்திகராக இருக்கின்றீர்கள் என்றால் அது நீங்களாக சுயமாக எடுத்த முடிவல்ல, அது உங்களுடைய சமூகத்தால் அதாவது உங்களுடைய குடும்பத்தினால் உங்களுக்கு ஏற்பட்டது அவ்வளவு தான். அதே போன்று நீங்கள் நாத்திகராக இருக்கின்றீர்கள் என்றால் அதுவும் இந்த சமூகத்தால் அல்லாது உங்களின் குடும்பத்தால் ஏற்பட்ட முடிவே தவிர வேறு ஒன்றுமே இல்லை.
ஆனால் ஆத்திகம் என்றால் என்ன வேறு யாருக்குமே தெரிய வில்லை, நீங்கள் எப்பொழுது உங்களுடைய சுயத்தை உணர்ந்து அதன் மூலமாக பரம்பொருளை பற்றிய அறிவு வந்து நீங்கள் ஆத்திகரானால் நீங்கள் அதனை விட்டு வெளியே வரும் பொழுது உங்களின் உடல் மற்றும் மனமானது மிக மிக கலக்கமடையும், ஆனால் நீங்கள் சுயத்தையே உணராமல் பரம்பொருளை பற்றிய எந்த ஒரு தெளிவும் இல்லாமல் மற்றவர்கள் எதனை சொன்னார்களோ அதனை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே ஆத்திகர் என்று சொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, அதனால் உங்களுக்கு எந்தவிமான பலனும் ஏற்படாமல் அதனால் நீங்கள் நாத்திகராக மாறினால் அதற்கு பெயர் ஆத்திகமும் இல்லை நாத்திகமும் இல்லை, நீங்க ஓர் உணவு பிடிக்கவில்லை அல்லது அதனையே அதிகமாக உண்டதனால் அதன் மீது வெறுப்பு ஏற்பட்டு வேறு ஓர் உணவை நாடி செல்வதை போன்ற ஒன்றே தவிர இதற்கும் பரம்பொருளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஆத்திகரும் இலலை நாத்திகரும் இல்லை, நீங்கள் ஒரு சாதாரண வியாபாரியை போன்றவர் அவ்வளவு தான்.அதாவது வியாபாரிக்கு ஒரு பொருள் நஷ்டத்தை, கொடுத்தால் அதனை விட்டு விட்டு இன்னொரு பொருளுக்கு மாறி வியாபாரம் செய்வது போன்ற ஒன்றே தானே தவிர இதற்கும் ஆன்மிகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லவே இல்லை.
அதனால் இவைகள் எதுவுமே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. நீங்கள் உங்களை உணர்ந்து உங்களின் சுயத்தேடுதலை முடித்துக்கொண்டு அவனையே சரணடைந்து இருக்கும் பொழுது தான் உண்மையான ஆத்திகமானது ஏற்படும். அவ்வளவு தான் .
No comments:
Post a Comment