Tuesday 21 January 2020

வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகள் யாவை?

உலகத்தில் அறிய பட்ட பெரிய மோசடி எது என்பது எனக்கு தெரியாது, ஆனால் அறிய படாத பெரிய மோசடி என்றால் அது கருத்தினை திருடுதல் தான். இதனை நான் என்னுடைய வாழ்க்கையிலேயே நிறைய முறை பார்த்து இருக்கிறேன், காரணம் நான் நிறைய விஷயங்களை நிறைய முறை சாதாரணமாக சொல்லுவேன்.
அப்படி பட்ட சிலவிஷயங்களில் நான் மூளையை பற்றி சொன்ன ஒன்று, அதாவது வலது மூளை மற்றும் இடது மூளை யை எப்படி மீட்டுருவாக்குகிறது லண்டனில் உள்ள ஒரு மிக பெரிய மருத்துவரிடம் சொல்லி இருக்கின்றேன்.
அதனை அவர் தன்னுடைய ஆராய்ச்சியில் அதனை பயன்படுத்தி கொண்டார், ஆனால் அதனை வெளிவிடும் பொழுது அதில் என்னுடைய பெயரினை சொல்லவே இல்லை, பரவா இல்லை என்று நான் விட்டு விட்டேன்,
அதன் பிறகு, அதில் சில சிக்கல்கள் இருக்கின்றது என்பதனை நான் கண்டுபிடித்தேன் அதன் பிறகு அதனை நான் யாரிடமும் சொல்லவே இல்லை, அதனை இன்றும் அவர்களால் சமன் செய்யவே முடியவில்லை. அது என்ன வென்று நான் முதுமறதி(alzheimer) அது ஏற்படுகின்ற பொழுது மறுபக்க மூளையை எப்படி இயக்கினால் அதற்கு மாற்று ஏற்படும் என்று சொன்னேன்.
அடுத்தது எனக்கு தெரிந்த எனது நண்பர் அவர் அமெரிக்காவில் இருக்கிறார், அவரும் டாக்டர் தான், அவர் அங்கே ஒரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார், ஆனால் அவர் என்னிடம் நேரடியாகவே ஒன்றினை பற்றி கேட்டார்.
அதாவது ஆரிட்டிஸிபிள் இன்டெலிஜெண்ட்ஸ் செய்வதற்கான ஒரு முறையில், மூளைக்கு எப்படி கட்டளைகள் நம்முடைய செல்களின் வழியாக கடத்த படுகிறது என்பதனை பற்றி விளக்கமாக கற்று கொண்டு அதனை வைத்து மிகப்பெரிய இன்னொரு பல்கலை கழகத்தில் தன்னுடைய விளக்க உரையை சமர்ப்பித்தார்.
ஆனால் அதில் என்னுடைய பேரினை சேர்த்து கொண்டார், அதன் பிறகு எனக்கு நன்றியும் தெரிவித்தார். அதன் பிறகு அதில் நிறைய விசயங்களை பற்றி நான் தெரிந்து கொண்டேன், அத்தனையும் இன்றுவரையில் யாரிடமும் சொல்லவே வில்லை. காரணம் நாம் நம்முடைய நாட்டிற்கு எதனை சமயம் வரும்பொழுது உபயோக படுத்தலாம் என்கிற எண்ணத்தில் தான்.
மேலும் நான் ஒரு யூனிவெர்சிட்டிக்கு அவர்களின் உளவியல் பிரிவிற்கு மனசிதைவை பற்றி கருத்தாக்கம் செய்து கொடுத்தேன், அது உலக சுகாதார மயத்திற்கான ஒரு ஆராய்ச்சி முடிவுகளுக்காக பயன் படுத்த படுகின்றது. அதிலும் என்னுடைய பெயர் இருக்கும்.
ஏன் இத்தனை சொல்லுகின்றேன் என்றால் உலகத்திலேயே இந்த கருத்து திருட்டு என்பது தான் இப்பொழுதைய மிக பெரிய திருட்டே. நாம் இப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கின்ற கோராவில் கூட இது நடந்து கொண்டு இருக்கலாம்,
ஆனால் எனக்கு கவலை இல்லை, காரணம் அதற்கு முன்பு நிறைய மக்கள் அதனை பற்றி தெரிந்து கொண்டு இருப்பார்கள் அதனால் தான், மேலும் சிலருக்கு அப்புறம் சொல்கிறேன் என்று சொல்வது கூட இதனை கருத்தில் வைத்து தான் தேவையானால் அவர்களே வந்து நேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்பதனால் தான்.

No comments:

Post a Comment