முதலில் நிறைய பெண்களுக்கு என்ன நினைப்பு என்றால் மற்றவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்கவேண்டும் என்கின்ற எண்ணம் ஆனது வளர்ந்துகொண்டே போகின்றது. முதலில் உங்களின் தாய் தந்தையர் என்ன சொல்லுகின்றார்கள் என்பதனை கேட்பதற்கு பழகுங்கள். காரணம் எந்த ஒரு தாய் தந்தையரும் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு கேவலமான நடத்தை கொண்டவர்களாக இருந்தாலும், நிச்சயமாக தங்களுடைய குழந்தைகளுக்கு தவறான வழியை காட்டமாட்டார்கள் இதனை நீங்கள் புனித்துக்கொண்டாலே போதுமானது.
காரணம் அவர்கள் ஏதாவது சொல்லுகின்றார்கள் என்றால் அது உங்களின் நன்மையை கருத்தில் கொண்டு இன்பந்தனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுங்கள். ஒரு பெண் இப்படி இருக்க வேண்டும் என்பது அவர்களின் தாய் தந்தையர்களுக்கு நிச்சயமாக தெரியாமல் கூட இருக்கலாம், ஆனால் அவர்கள் சொன்னால் அதில் அவர்களின் பாசத்தை மட்டுமே பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் தைரிய சாலிகளாக கூட இருக்கலாம் அல்லது உங்களின் கருத்துகள் அவர்களைவிட தெளிவாக இருக்கலாம் ஆனால் அனுபவம் என்பது உங்களைவிட அவர்களுக்கு அதிகம் அதனால் முதலில் அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதனை முதலில் கேளுங்கள் அப்புறம் அது சரியா தவறா என்பதனை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் அதற்காக அவர்களை முட்டாள்கள் என்று நினைப்பதும் எதிரிப்பதும் உங்களுக்கு தேவையில்லாத விசயங்களை உங்களின் வாழ்நாளில் ஏற்படுத்திவிடும்.
ஏன் பெண்கள் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றும் இபப்டி எல்லாம் உடை உடுத்தவேண்டும் என்பதும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள் என்றால் உலகத்தில் உள்ளவர்களின் பார்வைகளும் அவர்களின் பார்வைகளும் நிறைய வித்யாசம் உண்டு, அவர்களுக்கு உங்களின் பாதுகாப்பு மிக முக்கியம், மற்றவர்களுக்கு அப்படி அல்ல இதனை நீங்கள் புரிந்துகொண்டால் உங்களுக்கு எந்தவிதமான மன உளைச்சல் போன்றவை வராமல் இருக்கும்.
நீங்கள் நிறைய படித்து விட்டர்கள் என்பதனால் நீங்க அறிவாளி ஆகமாடீர்கள், அதே போன்று அவர்கள் நிறைய படிக்கவிலை என்பதனால் அவர்கள் முட்டாள்கள் அல்ல, அவர்கள் அனுபவம் மிக்கவர்கள், அவர்கள் எதனை சொன்னாலும் அதில் உங்களின் பாதுகாப்பை பற்றிய ஒரு பயம் இருக்கும். உங்களின் எதிர்காலத்தை பற்றிய ஒரு பயம் இருக்கும். இதனை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. அதனால் அவர்கள் சொல்வதை செவிமடுங்கள்.
No comments:
Post a Comment