Tuesday, 21 January 2020

சமாந்தர பிரபஞ்சம் (Parallel Universe) இருப்பதாக நான் நம்புகின்றேன். அந்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதற்கு ஏதுவான காரணங்கள் உண்டா?

நிச்சயமாக இந்த சமாந்தர பிரபஞ்சம் இருக்கின்றது, ஆனால் அதனை நாம் இந்த உடலை கொண்டு கண்டறிய முடியாது. காரணம் இந்த உடல் ஆனது இந்த பிரபஞ்சத்தின் விதிகளுக்கு உட்பட்டது நீங்கள் இதனை கடந்து செல்ல வேண்டும் என்றால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கு உங்களின் உடலின் தன்மைகளை மாற்றவேண்டும், அப்புறம் உங்களின் உடலை பற்றிய முழுமையான விழிப்புணர்வு தேவை மேலும் உங்களின் உடலின் ஆயுளை இதனை போன்று குறைந்தது பத்துமடங்கு அதிகரிக்க வேண்டும், அப்பொழுது தான் அந்த உலகத்தை நோக்கி நீங்கள் பயணிக்க முடியும். உங்களின் இப்பொழுதைய வயது அல்லது உங்களின் உடலை சார்ந்திருக்கின்ற வயதானது அதற்கு பத்தாது.

No comments:

Post a Comment