Tuesday 21 January 2020

சமுதாயத்தில் எல்லோரும் என்னை மதிக்கும் ஒரு நபராக நான் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

அசல் கேள்வி: சமுதாயத்தில் எல்லாரும் என்னை மதிக்கும் ஒரு நபராக நான் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்களை நீங்கள் மதியுங்கள் மற்றவர்கள் உங்களை மதிப்பது இரண்டாம் பட்சம் தான். காரணம் அனைவருமே எப்பொழுதுமே மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்று மதிப்பை பிச்சை எடுக்கின்ற நிலையில் தான் இருக்கின்றீர்கள். மதிப்பு என்பது ஒன்று அது நீங்கள் தேடிச்செல்லக்கூடாது அதுதான் உங்களை தேடிவரவேண்டும். நீங்கள் செய்கின்ற வேளையில் நீங்கள் கவனமாக இருந்தால் மற்றும் உங்களுடைய அணைத்து செய்யலியும் நீங்கள் விழிப்புணர்வுடன் செய்துகொண்டே வந்தால் அந்த செயலே உங்களை மற்றவர்கள் மதிப்பதற்கு காரணமாக அமைகின்றது.
நாம் எதனை செய்யவேண்டும் என்று நீங்கள் மற்றவர்களிடம் கேட்கும் பொழுதுக்தே நீங்கள் உங்களை இன்னமும் மதிக்கவில்லை என்று தெரிகின்றது. நீங்களே உங்களை மதிக்கவில்லை, உங்களின் செயல்களை மதிக்கவில்லை என்றால் எப்படி மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். நீங்கள் முதலில் உங்களை அங்கீகரியுங்கள். மற்றவர்களின் அங்கீகாரம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
நீங்கள் செய்கின்ற வேளையில் உங்களுக்கு ஒரு ஆன்ம திருப்தி இருக்கவேண்டும் அப்பொழுது தான் அது முழுமை பெற்றதாக மாறும் எப்பொழுது அது முழுமை பெற்றதாக மாறுகிறதோ அப்பொழுதே அது மதிப்புமிகுந்ததாக ஆகிவிடுகின்றது. நீங்கள் செய்கின்ற அணைத்து வேலைகளையும் மற்றவர்கல் மதிக்கவேண்டும் என்று நினைப்பதே உங்களின் இயலாமையை தான் காட்டுகின்றது. காரணம் உங்களை நீங்கள் மதிக்காததன் வெளிப்பாடுதான் மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் என்று நினைத்தாலே நீங்கள் உ களின் சுயத்தை இழந்துவிடுவார்கள். அதனால் உங்களின் சுயதில் எப்பொழுது இருங்கள். தன்னாலேயே மதிப்பு உயரும்.

No comments:

Post a Comment