அசல் கேள்வி: திருமண செலவை பெண்ணின் பெற்றோரும் மகனின் பெற்றோரும் சமமாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தங்கள் கருத்து?
இதில் என்ன சமமாக? யாரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவு செய்தால் போதும், அதனால் அதிகமாக செலவு செய்து விட்டேன் என்று எவனு சொல்லக்கூடாது, காரணம் திருமணம் என்பதே ஒரு பண்டிகை போன்றது அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக செய்ய வேண்டிய ஒன்று, இது வியாபாரம் அல்ல லாப நஷ்ட கணக்குகளை பார்ப்பதற்கு, முகியமானது, தங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வ்ளவு என்றால், கடன் வாங்கி அல்ல, நம்முடைய கையில் வைத்திருப்பதை கணக்கிட்டு தான் சொல்லுகிறேன், சிலர் இருக்கிறார்கள், வைத்திருக்கின்ற எல்லா சொத்துக்களையும் விற்று ஆடம்பரமாக செலவு செய்து விட்டு, அப்புறம் தலையில் துண்டு போட்டு கொண்டு,கடன் காரனுக்கே பதில் சொல்ல முடியாமல் போவது , இது எல்லாம் தேவையா என்று யோசிக்க வேண்டும், நம்மால் இவ்வளவுதான் முடியும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும் அவ்வ்ளவுதான்
No comments:
Post a Comment