Tuesday, 21 January 2020

அவள் எளிதாக சொல்கிறாள் காதலை மறந்து என்னோடு நட்பாக பழகு என்று. ஆணாக என்னால் அது இயலவில்லை. அவளை விட்டும் பேசாமல் விலக முடியவில்லை. அவளால் காதலியாக தொடர முடியவில்லை (அவளை தோழியாக பார்ப்பதை விட பேசாமல் தூரமாவது ஈசியா இருக்கு). ஏன் இப்படி?

முதலில் நீங்கள் இருவருமே காதலிக்க வில்லை என்று சொல்லுவேன், காரணம் உங்களுக்கு இருந்தது காதலே அல்ல, அது ஒரு மனித உறவின் ஈர்ப்பு அதாவது உங்களுடன் உங்களுடைய உடல் ஆனது செய்கின்ற ரசாயன மாற்றம் மட்டுமே. நீங்கள் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ பாரிக்கின்றீர்கள் உங்களுக்குள்ளே ஏற்படுகின்ற ரசாயன மாற்றம் ஆனது அவர்களை நோக்கி உங்களின் கவனத்தை திருப்புகிறது, அதே போன்று அவர்களுக்கும் உங்களை நோக்கிய ரசாயன மாற்றம் ஆனது நிகழ்கின்றது அவர்களும் உங்களை நோக்கி கவனத்தை திருபுகிட்ணறார்கள், அப்புறம் நீங்களும் அவரும் கலந்து பேசுகின்றீர்கள், ஒருவரையும் ஒருவர் பிடித்துவிடுகிறது உடனே அதனை நீங்கள் காதல் என்று நினைத்து கொள்கின்றீர்கள், அப்புறம் நீங்கள் பழக ஆரம்பிக்கின்றீர்கள், உங்களை பற்றி அவருக்கும், அவரை பற்றி உங்களுக்கும் தெரிய ஆரம்பிக்கின்றது அப்புறம் உங்களை அவரும், அவரை நீங்களும் நெருங்கி நின்று பார்க்கின்ற பொழுது அந்த காதல் என்று சொல்ல கூடிய ஒன்று சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கின்றது ஆனால் நீங்கள் நினைக்கிறீர்கள் இது வாழ்நாள் முழுதும் தொடரும் என்று ஆனால் உண்மையில் அவருக்கும் உங்களுக்கும் இருந்தது ஒரு உடல் ரீதியான ஒரு ரசாயன மாற்றம் மட்டுமே அந்த ரசாயன மாற்றம் ஆனது சிறிது சிறிதாக நீர்த்து போகின்றது, அவ்வளவு தான் இதனை எல்லாம் பெரிய விசயமாக எடுத்துக்கொண்டு நீங்களும் துடிக்கின்றீர்கள், அவரும் துடிக்கின்றனர் ஆனால் அதுவும் சில நாட்களுக்கு தான் அதன் பிறகு நீங்கள் உங்களின் வழியில் பயண படுகிட்ணறீர்கள் அவர்கள் அவர்களுடைய வழியில் பயண படுகின்றார் அவ்வளவு தான் இதற்கு போய் இவ்வளவு கற்பனைகள். அந்த கற்பனையின் கேள்வி தான் இது. நீங்கள் செய்ததற்கு பெயர் காதலே அல்ல அது ஒரு உடல் இன்னொரு உடலை நோக்கி செலுத்துகின்ற ரசாயன மாற்றங்கள் மட்டுமே.இதற்கு ஏதற்கு இவ்வளவு கற்பனை கோட்டைகல் போய் வேலையை பாரு.

No comments:

Post a Comment