Tuesday, 21 January 2020

புத்தமதமும், ஜைனமதமும் இன்றும் உயிர்ப்போடு இருக்கும் பொழுது ஆசிவகம் மட்டும் ஏன் மறைந்து போனது?

முதலில் நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் இந்த மதப்பிரிவுகள் எல்லாம் எப்பொழுது வந்தது என்றால் எப்பொழுது ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்தார்களோ அப்போகுது தான். அதற்கு முன்பு இவைகள் அனைத்துமே மதங்கள் ஆகா இல்லை. காரணம் இவைகள் அனைத்துமே கொள்கைகளும் கோட்பாடுகளும் மட்டுமே. காரணம் அவர்கள் தான் இதனை மதங்களாக மாற்றினார்கள்.
காரணம் இந்த இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் யூதர்களும் தான் தங்களுடைய கோட்பாடுகளை மதங்கள் என்று அழைத்தார்கள். மற்றவர்கள் யாருமே இதனை மதங்கள் என்று அழைத்து இல்லை.
காரணம் இங்கே இருந்தவர்கள் அனைத்துமே கோட்பாடுகளும், கொள்கைகளும் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகளும் மட்டுமே.
அதனால் இதனை யாருமே மதங்கள் என்று அழைத்ததே இல்லை.
மேலும் நீங்கள் நினைப்பது போன்று பௌத்தம் ஜைனம் ஆசிவகம், மட்டும் அல்ல, தந்த்ரா, கபாலிகம், சாங்கியம் கெவ்மாரகம், மீமாம்சகம், காணாபத்யம், சக்தி வழிபாடு என்று சொல்லக்கூடிய அனைத்துமே கொள்கைகள் மட்டுமே.
மேலும் இவைகளை யாரும் தனிமனிதர்கள் உரிமை கொண்டாடவில்லை. காரணம் இவைகள் அனைத்துமே தலைமுறை தலைமுறையாய் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் யாரையுமே கடவுள் என்று குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதைகள் செய்துவந்தார்கள். அதாவது அவர்கள் இதில் உள்ள யாரையுமே கடவுள் என்று குறிப்பிடவில்லை, ஆனால் வணங்கி வந்தார்கள். அப்படி வணங்கி வந்தது தான் பின்னாளில் கடவுளாக மாற்றப்பட்டது.
இதில் பௌத்தமும் சமணமும் ஏன் மிக விரிவடைந்தது என்றால் அது மிகப்பெரிய கொள்கைகளாக மாறியதற்கு காரணம் அதனை அவர்களுடைய சிஷ்யர்கள் உலகம் முழுவதும் கொண்டு சென்றார்கள். அதனால் தான் அது பெரிய மதங்களாக பரவியது. ஆனால் இஸ்லாம் மற்றும் கிருத்துவம் யாரை கொன்றார்கள் என்றால் இந்த இரண்டு மதங்களை சேர்ந்தவர்களை தான். அவர்களின் பெயர் தான் பேகன்கள் என்று சொல்லுவார்கள். அதாவது பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் மற்றும் கபாலிகர்கள் இவர்கள் மூவரையும் தான் கொன்றார்கள். ஆனால் அவர்கள் இதனை பற்றி அறிந்து இருக்கவில்லை. கரணம் அவர்கள் இதன் பிறகுதான் இந்தியாவிற்கு வந்தார்கள் அப்பொழுது தான் அவர்களுக்கே தெரியும் இவையனைத்துமே இந்தியாவில் உண்டானவை என்று. அவ்வ்ளவு தான் மேலும் இந்திய முழுவதும் மட்டும் எனக்குறைய இவைகளை போன்ற நானூறுக்கும் அதிகமான கோட்பாடுகள் இருந்தன அவைகள் அனைத்தயும் இவர்கள் மற்றிது விட்டார்கள். அதில் ஒன்று தான் ஆசிவகம் அவ்வளவு தான். ஆசிவகம் என்பது தான் நம்முடைய முன்னோர்கள் வழிபடு மற்றும் சக்தி வழிபாட்டினை சார்ந்தது.

No comments:

Post a Comment